/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.150 கோடி நிலத்தை அமுக்க ஆளுங்கட்சி புள்ளி திட்டம்!
/
ரூ.150 கோடி நிலத்தை அமுக்க ஆளுங்கட்சி புள்ளி திட்டம்!
ரூ.150 கோடி நிலத்தை அமுக்க ஆளுங்கட்சி புள்ளி திட்டம்!
ரூ.150 கோடி நிலத்தை அமுக்க ஆளுங்கட்சி புள்ளி திட்டம்!
PUBLISHED ON : ஆக 11, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “அரசு பங்களாவை காலி செய்ய மாட்டேங்கிறாருங்க...” என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“சென்னை, வண்டலுா ர் உயிரியல் பூங்கா இயக்குநர் தங்குறதுக்கு, பூங்கா வளாகத்துலயே அரசு பங்களா இருக்கு... முன்னாடி இங்க இயக்குநரா இருந்தவர், இப்ப அதை விட உயர்ந்த பதவிக்கு போயிட்டாருங்க...
“ஆனாலும், உயிரியல் பூங்கா பங்களாவை காலி செய்யல... அங்க, வயதான தன் தாயாரை தங்க வச்சிருக்காரு... அவங்களுக்கு உதவிகள் செய்ய பூங்காவைச் சேர்ந்த ஒரு வனச்சரகரை நியமிச்சிருந்தாருங்க...
“அவரிடம் ரொம்ப வேலை வாங்கி, 'டார்ச்சர்' பண்ணவே, அவர் இடமாறுதல் வாங்கிட்டு போயிட்டாரு... இன்னும் அந்த பங்களாவை அதிகாரி காலி செய்யாம இருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“ஸ்ரீநிவாச ரெட்டி, திருப்பதி போயிட்டு எப்ப வந்தீர்...” என, நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே, “பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டா ஓய்...” என்றார்.
“என்ன விவகாரம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, எஸ்.கைலாச புரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருக்கும், அவரது உறவினருக்கும் சமீபத்துல தகராறு நடந்திருக்கு... ரெண்டு தரப்பும், புதியம்புத்துார் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துது ஓய்...
“அவாளிடம் விசாரணை நடத்திய போலீசார், 'வழக்கு எதுவும் வேண்டாம்'னு சமரசம் பேசி அனுப்பிட்டா... ஆனா, இந்த வழக்கு தொடர்பா, கோர்ட்ல இருந்து சதீஷுக்கு திடீர்னு நோட்டீஸ் வந்திருக்கு ஓய்...
“அதிர்ச்சியான சதீஷ், ஸ்டேஷன் அதிகாரியிடம் போன்ல பேசியிருக்கார்... அப்ப, 'டி.எஸ்.பி.,க்கு ஆன்லைன் வழியா, 15,000 ரூபாய் அனுப்பினேன்... போலீஸ் ஸ்டேஷனுக்கு, 18,000 ரூபாய்ல இன்வெர்ட்டர் பேட்டரி வாங்கி குடுத்தேன்... எல்லாத்தையும் வாங்கிட்டு, என் மேல வழக்கும் போட்டது என்ன நியாயம்'னு கேட்டிருக்கார்... இந்த ஆடியோ பரவி, போலீசார் மானத்தை கப்பல் ஏத்தீண்டு இருக்கு ஓய்...” என்றார், குப்பண்ணா.
“கிட்டத்தட்ட, 150 கோடி ரூபாய் நிலத்தை, 'ஆட்டை' போட பாக்காவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திருச்சி, கே.கே.நகரில் சபரி மில்ஸ் என்ற ரைஸ் மில் இருந்துச்சு... 30 வருஷத்துக்கு முன்னாடி இந்த மில்லை மூடிட்டாவ... மில்லுக்கு சொந்தமான, 20 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கும் விற்பனை பண்ணிட்டாவ வே...
“அந்த பகுதி, தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகி ஒருத்தர் இந்த நிலத்துல, 1.50 ஏக்கரை வேலி போட்டு ஆக்கிரமிச்சு, அது தன் மூதாதையர் நிலம்னு சொல்லுதாரு... இது சம்பந்தமா தனியார் நிறுவனம், திருச்சி மாநகர போலீசில் புகார் குடுத்தும் நடவடிக்கை எடுக்கல வே...
“தனியார் நிறுவனம் சார்பில், 'இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது'ன்னு நோட்டீஸ் ஒட்ட சமீபத்துல வக்கீல்கள் போயிருக்காவ... தி.மு.க., பிரமுகரின் ஆட்கள் ஆயுதங்களுடன் வந்து, அவங்களை சிறை பிடிச்சுட்டாவ... 'இது, அமைச்சர் விவகாரம்... இதுல, தலையிட்டா காணாம போயிடுவீங்க'ன்னும் மிரட்டியிருக்காவ வே...
“அப்புறமா போலீசார் வந்து, வக்கீல்களை மீட்டிருக்காவ... இங்க, 1 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 100 கோடி ரூபாய்... இதனால, '150 கோடி ரூபாய் நிலத்தை அமுக்க பார்க்கிறது, அமைச்சருக்கு தெரிஞ்சு தான் நடக்கா, இல்லையா'ன்னு உள்ளூர் தி.மு.க.,வினர் முணுமுணுத்துட்டு இருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
“மகேஷ், உம்ம பிரண்ட் செந்தமிழ் செல்வன் வரார் பாருங்கோ...” என, நண்பரிடம் கூறியபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பி னர்.