sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

தனிப்பட்ட ஒருவருக்காக வளைக்கப்படும் விதிகள்!

/

தனிப்பட்ட ஒருவருக்காக வளைக்கப்படும் விதிகள்!

தனிப்பட்ட ஒருவருக்காக வளைக்கப்படும் விதிகள்!

தனிப்பட்ட ஒருவருக்காக வளைக்கப்படும் விதிகள்!

2


PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அ மைச்சர்கிட்ட புகார் சொல்லியும், பலன் இல்ல பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லும் வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தாளக்கரை கிராமத்துல சமீபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்துச்சு... இதுல, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்துக்கிட்டாரு பா...

''அவர்கிட்ட, எம்.வி.பாளையம் வி.ஏ.ஓ.,வை பத்தி ஆளுங்கட்சியினரும், பொதுமக்களும் பல்வேறு குற்றச்சாட்டு களை அடுக்கியிருக்காங்க... அப்ப, தாசில்தார், பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளும் கூடவே இருந்தாங்க பா...

''ஆனா, இதுவரைக் கும் அந்த வி.ஏ.ஓ., மேல எந்த நடவடிக்கையும் இல்ல... சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,வோ, 'என்னை பத்தி மினிஸ்டரிடம் புகார் சொன்னீங்களே... என் தலையை எடுத்துட்டாங்களா என்ன'ன்னு கெத்தா பேசிட்டு இருக்காரு... அதுவும் இல்லாம, இப்ப தன் கையெழுத்துக்கான, 'கட்டிங்'கை, மினிமம், 500 ரூபாயா அதிகரிச்சுட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஈஸ்வரா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, ''குற்றவாளிகளுக்கு தான் ஒத்தாசையா இருக்கா ஓய்...'' என்றார்.

''எந்த ஊர் போலீசாரை சொல்றீங்க...'' என, பட்டென கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை அம்பத்துார்ல, ஆளுங்கட்சி கூட்டணி கட்சி பிரமுகர் ஒருத்தர் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தறார்... இவர்கிட்ட ரெண்டு பேர் போய், சென்னை மாநகராட்சி முக்கிய புள்ளியின் பெயரை பயன்படுத்தி, மிரட்டி பணம் பறிச்சிருக்கா ஓய்...

''இது சம்பந்தமா, போலீஸ்ல புகார் குடுத்தும் நடவடிக்கை இல்ல... இதனால, மிரட்டல் புள்ளிகளை அந்த கட்சி பிரமுகரே போலீஸ்ல புடிச்சு குடுத்தார் ஓய்...

''ஆனாலும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி, கூட்டணி கட்சி பிரமுகரை நாசுக்கா மிரட்டி, புகாரை வாபஸ் வாங்க வச்சு, மிரட்டல் புள்ளி களை வீட்டுக்கு அனுப்பிட்டார்... இந்த தகவல் போலீஸ் துறையின் உச்ச அதிகாரிக்கு தெரிய வர, அந்த பகுதி போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையா, 'டோஸ்' விட்டிருக்கார்...

''இதனால, வேற வழியில்லாம கூட்டணி கட்சி பிரமுகரிடம் மறுபடியும் புகார் வாங்கி, மிரட்டல் புள்ளிகளை கைது பண்ணி, ஜெயில்ல அடைச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கிருஷ்ணகுமார், இந்த பேப்பரை அங்க வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''தனிப்பட்ட ஒருத்தருக்காக அரசின் விதிகளை வளைக்கிறாங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...

''சென்னை பெருந கருக்கான போக்குவரத்து குழுமம், 'கும்டா' என்ற பெயரில் செயல்படுது... இதில், சிறப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலரா, 'டெபுடேஷன்'ல வந்த ரயில்வே அதிகாரியின் பதவிக் காலம் முடிஞ்சிடுச்சுங்க...

''ஆனாலும், கும்டா வில் தொடர அவர் விரும்புறாரு... இதுக்காக, ரயில்வே பணியில் இருந்து விருப்ப ஓய்வும் வாங்கிட்டு வந்துட்டாரு... அவரை ஒப்பந்த அடிப்படையில், கும்டாவின் உறுப்பினர் செயலரா நியமிக்க ஏற்பாடு நடக்குதுங்க...

''இந்த பதவியில் சர்வீஸ்ல இருக்கிற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான் இருக்கணும்... சட்டப்படி சாத்தியமில்லாத இதை எப்படியாவது செய்யணும்னு, தலைமைச் செயலர் பெயரை பயன்படுத்தி, சிலர் அழுத்தம் குடுக் கிறாங்க... 'தனிப்பட்ட ஒருத்தருக்காக இப்படி அப்பட்டமா விதிமீறல்ல ஈடுபடுறது சரியில்ல'ன்னு நேர்மையான அதிகாரிகள் புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us