/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு துணை சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இன்றி நோயாளிகள் அவதி
/
அரசு துணை சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இன்றி நோயாளிகள் அவதி
அரசு துணை சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இன்றி நோயாளிகள் அவதி
அரசு துணை சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி இன்றி நோயாளிகள் அவதி
PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM
உத்திரமேரூர், சோமநாதபுரம் துணை சுகாதார நிலையத்தில், குடிநீர் வசதி இல்லாததால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, சோமநாதபுரம் பகுதியில், அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு, ஆறு மாதத்திற்கு முன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் தினமும் வந்து செல்கின்றனர். இந்த துணை சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியர், மாதாந்திர பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி, காய்ச்சல், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட இந்த துணை சுகாதார நிலையத்தில், குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், இங்கு வரும் நோயாளிகள் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், துணை சுகாதார நிலைய பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரை, குடிநீர் டிராக்டர் மூலம் ஊழியர்கள் தினமும் பெற்று வருகின்றனர்.
துணை சுகாதார நிலையத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த நோயாளிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கூறியதாவது:
அரசு துணை சுகாதார நிலையம் புதிதாக கட்டும்போதே, குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதனால், துணை சுகாதார நிலைய பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாமல், தினமும் ஊழியர்கள், நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.