PUBLISHED ON : ஆக 07, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார் கொளத்துார் ஜி.கே.எம்., காலனி பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது 17 வயது மகள், தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். சில நாட்களாகவே இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இது குறித்து அவரது தாய் விசாரித்தபோது, வெளியே செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 22, என்ற வாலிபர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருவதாக, சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொளத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், கொளத்துார் ஜி.கே.எம்., காலனி பகுதியைச் சேர்ந்த சஞ்சயை கைது செய்தனர்.