sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

பற்றிய தீ... மூண்ட புகை... தவிக்கும் மக்கள்

/

பற்றிய தீ... மூண்ட புகை... தவிக்கும் மக்கள்

பற்றிய தீ... மூண்ட புகை... தவிக்கும் மக்கள்

பற்றிய தீ... மூண்ட புகை... தவிக்கும் மக்கள்


ADDED : ஜூலை 27, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்து அபாயம்

செவந்தாம்பாளையம் - சந்திராபுரம் ரோட்டில் வளைவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

- நித்தின் பிரனாவ், செவந்தாம்பாளையம்.

கடும் துர்நாற்றம்

சுண்டமேடு பகுதியில் சர்ச்சுக்கு அருகே மக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். அந்த இடத்தில் குப்பை கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- ராஜா, சுண்டமேடு.

பல்லாங்குழி சாலை

முருகம்பாளையம் சுபாஷ் பள்ளி பகுதியில் இருந்து இடுவம்பாளையம் செல்லும் ரோடு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

- கேசவன், முருகம்பாளையம்.

தவறான பின்கோடு

திருப்பூர் ஸ்டேட் பேங்க் காலனி 1வது வீதியில் உள்ள பெயர் பலகையில் பின்கோடு தவறாக பதிவிட்டுள்ளனர். இதை சரி செய்ய வேண்டும்.

- முத்து, ராயபுரம்.

புகைமூட்டம்

திருப்பூர் மண்ணரை சுடுகாடு அருகே குப்பை மேடு, 24 மணி நேரமும் தீ பிடித்து எரிந்து, புகையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

- சுந்தரலிங்கம், மண்ணரை

'அபாய' மரங்கள்

திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் ரோடு டி.என்.எஸ்., வீதியில், இரண்டு மரங்கள் காய்ந்து, விழும் நிலையில் உள்ளது.

- சிவநாதம், திருப்பூர்.

கழிவுநீர் தேக்கம்

நல்லுார் வி.ஐ.பி., மற்றும் ஜெ.எஸ்., கார்டன் மெயின் வீதியில் கடந்த, இரு மாதமாக சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி உள்ளது.

- சின்னப்பன், நல்லுார்.

குப்பைக்கு தீ

தெக்கலுாரில் குப்பை கிடங்கில் அடிக்கடி இதுபோன்று தீ வைத்து விடுகின்றனர். இதன் காரணமாக புகை மண்டலம் ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.

- சண்முகம், தெக்கலுார்.

ரியாக்ஷன்

சீரானது கால்வாய்

திருப்பூர் ராக்கியாபாளையம் சேரன் நகரில் ரோட்டில் வெளியேறி வந்த சாக்கடை கழிவு நீர் சரி செய்யப்பட்டது.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன்

கடிகாரம் பழுதுநீக்கம்

திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் உள்ள கடிகாரம் சரி செய்யப்பட்டது.

- வின்சென்ட் ராஜ், ராயபுரம்.






      Dinamalar
      Follow us