/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
நடுரோட்டில் வழிமறிக்கிறது 'டிரான்ஸ்பார்மர்'; பீளமேடு காவல் நிலையம் அருகே ஆபத்து
/
நடுரோட்டில் வழிமறிக்கிறது 'டிரான்ஸ்பார்மர்'; பீளமேடு காவல் நிலையம் அருகே ஆபத்து
நடுரோட்டில் வழிமறிக்கிறது 'டிரான்ஸ்பார்மர்'; பீளமேடு காவல் நிலையம் அருகே ஆபத்து
நடுரோட்டில் வழிமறிக்கிறது 'டிரான்ஸ்பார்மர்'; பீளமேடு காவல் நிலையம் அருகே ஆபத்து
ADDED : ஜூலை 27, 2025 11:08 PM

சாக்கடை அடைப்பு பி.என்.புதுார், 75வது வார்டு, புளியமரம் பேருந்து நிறுத்தம் பின்புறம், கிரீன் அவென்யூவில் சாக்கடை அடைத்துள்ளது. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுப்பெருக்கமும் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- முத்துகுமாரசாமி, பி.என்.புதுார்.
சாலையில் இடையூறு ராதாகிருஷ்ணா ரோடு, 68வது வார்டு, பல் மருத்துவமனை முன்புறம், உடைந்த மரத்தின் கிளைகள் மற்றும் இலை குப்பை, பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளைகள், பாதசாரிகள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.
- கிருஷ்ணராஜா, ராதாகிருஷ்ணா ரோடு.
மேடு, பள்ளமான ரோடு குனியமுத்துார், செல்வம் நகர், குழாய் சீரமைப்பு பணிகளுக்காக, சாலைகள் தோண்டப்பட்டன. கடந்த ஒரு மாதமாக பணிகள் எதுவும் நடைபெறவில்லை. சாலையும் சீரமைக்கவில்லை. மேடு, பள்ளமாக, சகதியாக இருக்கும் சாலையில், வாகனங்களை இயக்க முடியவில்லை.
- அருண்குமார், குனியமுத்துார்.
ஆக்கிரமிப்பால் நெருக்கடி சங்கனுார் சாலையின் இருபுறமும் கார், டாக்சி மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தாறுமாறாக பல மணி நேரம் நிறுத்தப்படும் இந்த வாகனங்களால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டியிருப்பதால், அடிக்கடி விபத்தும் நடக்கிறது.
- சுப்பிரமணியன், சங்கனுார்.
பள்ளி அருகே கழிவுகள் துடியலுார் - கோவில்பாளையம் ரோடு, அசோகபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, அரசு மகளிர் பள்ளியின் அருகே, சிலர் திறந்தவெளியில் குப்பை கொட்டுகின்றனர். இறைச்சிக்கழிவுகளையும் கொட்டுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளின் நலன் கருதி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வைரவன், என்.ஜி.ஜி.ஓ., காலனி.
மின்மாற்றியால் சிரமம் பீளமேடு காவல்நிலையம் அருகே, பன்மால் எதிர்புறம், வ.உ.சி., காலனி செல்லும் வழியில், உயர்மின்மாற்றி சாலை நடுவே அமைந்துள்ளது. வாகனஓட்டிகளுக்கு சிரமமாகவும், ஆபத்தான வகையிலும் உள்ளது. மின்மாற்றியை பாதுகாப்பாக, வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
- சுரேஷ்குமார், தண்ணீர்பந்தல்.
பள்ளத்தால் விபத்து பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே சாலை வளைவில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. வளைவில் திரும்பும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. பள்ளங்களை ஜல்லிக்கற்கள், தார் கொண்டு மூட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
- கார்த்திக், க.க.சாவடி.
திறந்தநிலை சாக்கடை காந்திபுரம், ஆறாவது வீதி விரிவாக்கத்தில், சாக்கடை கால்வாயில் சிலேப் திறந்தநிலையில் உள்ளது. கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் கவர்கள் அடைத்துள்ளன. கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது. கால்வாயை சுத்தம் செய்வதுடன், சிலேப் கொண்டு மூட வேண்டும்.
- சசிகுமார், காந்திபுரம்.
மின்விபத்து அபாயம் குனியமுத்துார், இடையர்பாளையம் பிரிவு, பெனியல் நல்வாழ்வு கோவில் அருகே, மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. மரங்களின் கிளைகள் மின்ஒயர்களில் உரசும்படி உள்ளது. மின்விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
- சுசீலா, குனியமுத்துார்.