/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
இன்பாக்ஸ்: வீடுகளில் கழிவுநீர் புகும் அவலம்
/
இன்பாக்ஸ்: வீடுகளில் கழிவுநீர் புகும் அவலம்
ADDED : ஆக 03, 2025 09:58 PM

கால்வாய் அடைப்பு
அனுப்பர்பாளையம், மாதேஸ்வரன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் அடைத்து, ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. வீடுகளுக்குள் புகும் அவலம் நிலவுகிறது.
- குழந்தைகுமார், அனுப்பர்பாளையம்.
கருவம்பாளையம், தெற்கு தோட்டம் பகுதியில் குப்பை எடுக்க ஆட்கள் வருவதில்லை. கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
- ராஜா, தெற்கு தோட்டம்
---
குவிந்த குப்பை
பெரியார் காலனி ஏ.வி.பி., பள்ளி ரோட்டில் மலை போல் குப்பைகள் குவிந்துள்ளன. கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- பாலமுருகன், பெரியார் காலனி.
கருவம்பாளையம் பொன்னுசாமி கவுண்டர் வீதியில் ரேசன் கடை அருகே குப்பைகள் குவிந்து, கடும் சுகாதார சீர்கேடாக உள்ளது.
- வின்சென்ட் ராஜ், ராயபுரம்.
எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம் வ.உ.சி., நகர் பிரதான ரோட்டில் குப்பை குவிந்து கிடக்கிறது.
- சங்கர், வ.உ.சி., நகர்.
---
சாலையில் பள்ளம்
சிக்கண்ணா கல்லுாரி பின்புறம் விவேகானந்தர் ரோட்டில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- முத்து, காலேஜ் ரோடு.
---
குடிநீர் வீண்
பிச்சம்பாளையம் புதுார், கேத்தம்பாளையம் ரோடு முனியப்பன் கோவில் வீதி ரோட்டில் பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. ரோடு படுமோசமாக உள்ளது.
- ஏசுதாஸ், பிச்சம்பாளையம்.
ரியாக்ஷன்
வளம் ரோடு, காங்கயம் ரோடு இணையும் ரோடு, ஜல்லி கற்களாக இருந்தது; தற்போது சரி செய்யப்பட்டது.
- லோகநாதன், திருப்பூர்.