/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ஆரோக்கியத்தை பாதிக்கும் திறந்தவெளி உணவுகள்!
/
ஆரோக்கியத்தை பாதிக்கும் திறந்தவெளி உணவுகள்!
ADDED : ஆக 03, 2025 09:49 PM

நிரம்பி வழியும் சாக்கடை சவுரிபாளையம், பழனியப்பா நகர் இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரப்படுவதில்லை. பல வாரங்களுக்கு முன் சுத்தம் செய்த கழிவுகளையும் அகற்றவில்லை. கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் கழிவுநீர் வருகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் அதிகமாக உள்ளது.
- ரித்திஷ், சவுரிபாளையம்.
திறந்தவெளியில் உணவுகள் உக்கடம் பேருந்து நிலையத்தில் பல்வேறு சிற்றுண்டி உணவகங்கள் செயல்படுகிறது. பயணிகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை திறந்த வெளியில் வைத்துள்ளனர். பேருந்துகள் வரும்போது புகையும், துாசும் பறக்கிறது. இதை வாங்கி பயன்படுத்துவோர் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
- பாலாஜி, கோவைப்புதுார்.
தண்ணீர் தட்டுப்பாடு ஜி.என்.மில்ஸ், ஸ்ரீ சூர்யலட்சுமி கார்டன்ஸ் பகுதியில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. 15 நாட்களுக்கு மேல், குறைந்த நேரமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் உப்பு தண்ணீரும் விநியோகம் செய்யவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- சங்கர் சுப்ரமணியன், ஜி.என்.,மில்ஸ்.
ஆக்கிரமிப்புகளால் நெருக்கடி உப்பிலிபாளையம், 60வது வார்டு, ஜி.வி.,ரெசிடன்சி பழைய பாலம் முதல் கருப்பராயன் கோவில் வரை அதிகளவு சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளது. சாக்கடை கால்வாயை ஆக்கிரமிப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஆக்கிரமிப்புகளால் குறுகிப்போன சாலையில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- அருணாதேவி, உப்பிலிபாளையம்.
கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு சி.எம்.எஸ்., பள்ளி அருகே, 19வது வார்டு, ஜானகி நகர் பகுதியில், கால்வாயில் பெருமளவு பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் நிறைந்துள்ளது. இவை அடைத்து நிற்பதால், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி அருகே கடும் துர்நாற்றமும், சுகாதாரமற்ற சூழலும் நிலவுகிறது.
- அன்பரசன், ஜானகி நகர்.
தெருவிளக்கு பழுது சரவணம்பட்டி, ஒன்பதாவது வார்டு, 'எஸ்.பி -57. பி-1' என்ற எண் கொண்ட கம்பத்தில் அடிக்கடி தெருவிளக்கு பழுதாகிறது. அருகிலுள்ள கம்பத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக தெருவிளக்கு எரிவதில்லை. பழுதான தெருவிளக்குகளை மாற்றி புதிய விளக்குகளை பொருத்த வேண்டும்.
- சவுந்தர்ராஜன், சரவணம்பட்டி.
பூங்காவை சுற்றிலும் நாற்றம் குனியமுத்துார், சக்தி நகர் பூங்கா சுற்றுச்சுவர் அருகே அதிக அளவில் குப்பைகள் குவிந்தது. இதுகுறித்து புகார் செய்த பின் அகற்றப்பட்டது. மீண்டும் தற்போது பூங்காவின் மற்றொரு பகுதி அருகே திறந்தவெளியில் சிலர் குப்பயை வீசிச்செல்கின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுகளால் பூங்காவை சுற்றிலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டாமல்இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- கணேஷ், குனியமுத்துார்.
புகார் தெரிவித்தும் பலனில்லை கவுண்டம்பாளையம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், எட்டு பிளாக்கில் மொத்தம் 1,848 வீடுகள் உள்ளன. இங்கு, முறையாக கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. குடியிருப்பு வளாகத்தில் திறந்தவெளியில் கழிவுநீர் செல்கிறது. சுகாதாரமற்ற சூழலால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி மேயர், கமிஷனரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை
- சண்முகம், கவுண்டம்பாளையம்.
இருக்கை இல்லா நிழற்குடை செல்வபுரம், செட்டி வீதியில், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதில், இருக்கைகள் ஏதும் அமைக்கப்படாததால், பயன்படுத்த முடியவில்லை.குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ளது.
- பாலமுருகன், செட்டிவீதி.
நீர்வழிப்பாதையில் பிளாஸ்டிக் செல்வபுரம், சிந் தாமணி குளத்தின் நீர்வழிப்பாதையில் குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பை, பிளாஸ்டிக் காகிதம், பாட்டில்கள் என அதிகளவு குப்பை தேங்கியுள்ளது. மேலும், பாதி குளம் வரை ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளது.
- பாலமுருகன், செல்வபுரம்.
இருளால் அச்சம் ராமநாதபுரம், சாமாலே-அவுட், அல்வேர்னியா பள்ளி அருகே, 64வது வார்டில் உள்ள, 'எஸ்.பி -39, பி -8' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.
- ராஜா, ராமநாதபுரம்.
குடியிருப்பு நடுவே குட்டிபுதர் கணபதி, 20வது வார்டு, பாவையர் நகர், ஓம் பராசக்தி மில் ரோடு பகுதியில் குடியிருப்பு நடுவே காலியிடத்தில் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால், பாம்பு, தேள், பூரான்கள் அடிக்கடி வீடுகளுக்குள் வருகின்றன. குடியிருப்பு நடுவே உள்ள புதரை சுத்தம் செய்ய வேண்டும்.
- லீமா, கணபதி.