தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘வாழ்க்கையை

அணுகுவதற்கான

ஒரு வழி பரதம்!

கடந்த 22 ஆண்டுகளாக பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடன ஆசிரியையாக இருக்கும், வேலுாரைச் சேர்ந்த அனிதா வேதகிரி:

ஆந்திராவில் தான் பிறந்து வளர்ந்தேன். பரதம் மீது இருந்த ஆர்வம் காரணமாக பிளஸ் 2 முடித்ததும், சென்னை கலாஷேத்ரா நாட்டிய பள்ளியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். நான்கு ஆண்டு பயிற்சி முடித்ததும் மீண்டும் ஆந்திராவுக்கே திரும்பி விட்டேன்.

வேலுாரில் பாத்திரக்கடை நடத்தி வந்தவருடன் எனக்கு திருமணமானது. வேலுார் வந்த பின் கோவில்கள், விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் செய்து வந்தேன்.

என் 30 வயதில், ‘பிரார்த்தனம்’ என்ற நாட்டிய பள்ளியை துவக்கினேன். மாணவர்களுக்கு பரத நாட்டியத்தின் அடிப்படைகளை முறையாக கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். 2006ல், என் கலை பயணத்தின் முக்கியமான அங்கீகாரமாக கிடைத்த, ‘நாட்டிய மயூரி’ என்ற பட்டம் எனக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது.

மனதிற்கு பிடித்த நடனம், அன்பான கணவர், அழகான இரு பெண் குழந்தைகள் என வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் சென்று கொண்டிருந்தது. நாட்டிய பள்ளி வளர்ந்து வந்த நேரத்தில், என் கணவர் உடல்நிலை சரியில்லாமல், 2011ல் இறந்து விட்டார்.

இதனால், வாழ்க்கையே தடம் புரண்டது. இரு குழந்தைகளின் எதிர்காலம், குடும்ப பொறுப்பு என பல சவால்களை தனியாக எதிர்கொள்ள வேண்டிய அந்த கால கட்டத்திலும், நடனம் தான் எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. என் இரு குழந்தைகளை வளர்க்கவும், அவர்களின் படிப்புக்கு கை கொடுக்கவும் நடன பள்ளி தான் உதவியது.

என் மகள்களை மருத்துவர்களாக ஆக்கியிருக்கிறேன். வாடகை கட்டடத்தில் இருந்த நாட்டிய பள்ளி, இப்போது எங்கள் வீட்டிலேயே சொந்த கட்டடத்திற்கு மாறி இருக்கிறது. இந்த 22 ஆண்டுகளில், 350க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்.

நடனம் என்பது வெறும் அசைவு மட்டுமல்ல. அதில் ஒழுக்கம், உணர்வு, பாரம்பரியம் என எல்லாமும் இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை, வாழ்க்கையை அணுகுவதற்கான ஒரு வழி பரதம். இந்த அற்புதமான கலையை பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

* தொலைபேசி எண் கிடைக்காததால் வயது சேர்க்க முடியவில்லை பாஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us