/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'ஏரோ ஸ்பேஸ்' படித்து இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும்!
/
'ஏரோ ஸ்பேஸ்' படித்து இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும்!
PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் படித்து, ஐ.ஐ.டி.,யில் உயர் கல்வி படிக்க தேர்வாகியுள்ள, முதல் பழங்குடியின மாணவியான, சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி:
அம்மா கூலித் தொழிலாளி. அப்பா, புற்றுநோய் பாதித்து, 2023ல் இறந்து விட்டார். எனக்கு இரு சகோதரியரும், ஒரு அண்ணனும் உள்ளனர்.
கூலி வேலை செய்யும் அம்மாவிற்கு ஒரு நாளைக்கு, 250 ரூபாய் வருமானம் வரும். அதில் தான் எங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். சிறு வயது முதலே நன்கு படிப்பேன்.
நா ன் பெரிய கல்லுாரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, கருமந்துறை கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியி னர் உண்டு உறைவிட பள்ளியில் தா ன் படித்தேன்.
பிளஸ் 2 முடித்தபோது தான், ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வ தற்கான, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு குறித்து ஆசிரியர்கள் கூறினர்.
அவர்கள் வழிகாட்டுதலின்படி அரசு பயிற்சி மையம் வாயிலாக, இத்தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டேன். இது, 'மெயின்' தேர்வு மற்றும் 'அட்வான்ஸ்டு' தேர்வு என, இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், அட்வான்ஸ் தேர்வு எழுதுவர். அரசு பயிற்சி மையத்தின், 'ஆன்லைன் கோச்சிங்' வாயிலாக படித்து, மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.
அடு த்து, அட்வான்ஸ்டு தேர்வுக்கு ஈரோடு மாவட்டத்தில், அரசு சார்பில் ஒன்றரை மாதம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
அ தில் சேர்ந்து படித்து, பழங்குடியினர் பிரிவில் இந்திய அளவில், 417வது இடம் பெற்று, ஐ.ஐ.டி.,யில் சேர தகுதி பெற்றிருக்கிறேன்.
எங்கள் ஊரில் இருந்து முதன் மு றையாக ஐ.ஐ.டி.,க்கு செல்லும் மாணவி நான் தான். எனக்கு நம்பிக்கை கொடுத்து ஜெயிக்க வைத்த ஆசிரியர்கள், எங்கம்மா, அண்ணனுக்கு எவ்வளவு முறை நன்றிகள் கூறி னாலும் போதாது.
கூலி வேலை செய்வதால், எங்களை எவருமே மதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்தே எனக்கு வாழ்த்து சொல்கின்றனர்.
கல் வி, நம் நிலைமையை மாற்றும் என்பதை நேரடியாக பார்க்கிறேன். ஒரே நாளில், எங்கள் வாழ்க்கையே மாறிய மாதிரி இருக்கிறது.
சென்னை ஐ.ஐ.டி .,யில் சேர்ந்து, 'ஏரோ ஸ்பேஸ்' படித்து, இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்!