sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

புகுந்த வீட்டினர் தந்த ஊக்கத்தால் தொழில் வளர்ச்சி!

/

புகுந்த வீட்டினர் தந்த ஊக்கத்தால் தொழில் வளர்ச்சி!

புகுந்த வீட்டினர் தந்த ஊக்கத்தால் தொழில் வளர்ச்சி!

புகுந்த வீட்டினர் தந்த ஊக்கத்தால் தொழில் வளர்ச்சி!


PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைகள் வடிவில் ஸ்வாமி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும், சென்னை, பம்மலைச் சேர்ந்த பூஜா: பிறந்து, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம். சிறு வயது முதலே கைத்தொழில் ஏதாவது ஒன்றை கற்றபடியே இருப்பேன்.

என் அக்கா, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஓய்வு நேரங்களில், சாதாரண பொம்மை களை ஸ்வாமி போன்று அலங்காரம் செய்து, தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.

நான் பி.காம்., இரண் டாவது ஆண்டு படித்த போது, கொரோனா ஊரடங்கு வந்தது. அப்போது, அக்காவிடம் பொம்மைகளை அலங்காரம் செய்ய கற்றுக் கொண்டேன்.

இந்த பிசினசில் நல்ல எதிர்காலம் இருக்கு என தோன்றவே, மேற்படிப்பு யோசனையை கைவிட்டு, பிசினசில் இறங்கி விட்டேன்.

பொதுவாக, ஸ்வாமி சிலைகள் பெரியவர் களின் முக அமைப்பில் தான் இருக்கும். அதையே குழந்தை முகமாக கொடுத்தால், பலருக்கும் பிடிக்கும் என நினைத்து ஆரம்பித்தது தான், இந்த பிசினஸ்.

சில மாடல் பொம்மை களை, 'டிசைன்' செய்து, 'ஹலோ டாலி ' என்ற பெயரில், சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதில், சிறிது சிறிதாக ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.

பூணுால் அணியும் நிகழ்ச்சி, பிறந்த நாள், மஞ்சள் நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு என முக்கிய நிகழ்ச்சிகளுக்கான பொம்மைகளையும் செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.

பொம்மைகளுக்கான ஆடைகள், நகைகள் எல்லாமே கைகளால் செய்யும் வேலைகள் என்பதால், நிறைய நேரம் எடுக்கும். அதனால் மாதத்திற்கு, 70 ஆர்டர்கள் வரை தான் எடுக்கிறேன்.

பெண் பார்க்கும் நிகழ்வு துவங்கி, நிச்சயதார்த்தம், திருமணம், திருமண வரவேற்பு, குழந்தை பிறப்பு வரை, ஒவ்வொரு நிகழ்வையும் பொம்மையாக செய்து கொடுப்போம்; மொத்தம் , 100 பொம்மைகள் இந்த, 'செட்'டில் வரும். இதை, 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.

தென்மாநில, வடமாநில திருமண செட் என இரண்டு மாடல் செய்து கொடுக்கிறோம். ஒரு ஆர்டர் முடிக்கவே ஒரு மாதம் ஆகும். துவக்க விலையாக, 275 ரூபாய் முதல் பொம்மைகள் விற்பனை செய்கிறேன்.

சராசரியாக மாதம், 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும்; 1 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. நான்கு பெண்கள் என்னிடம் பணி புரிகின்றனர்.

திருமணம் முடிந்து வந்ததும், என் அத்தையும், மாமாவும், 'உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்; நாங்கள் உதவி செய்கிறோம்' என்று கூறினர். அவர்கள் கொடுக்கும் ஊக்கத்தால் தான் படிப்படியாக வளர்ந்து வருகிறேன்!

தொடர்புக்கு

63843 30905






      Dinamalar
      Follow us