தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : செப் 03, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2026 01:48 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை:

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடக்கும் சோழவந்தான் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கருப்பையா, 'ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது' என்ற கருத்தை சட்டசபையில் பதிவு செய்திருப்பது, இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., வுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் நெருங்கிய பந்தம் உள்ளது; நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால் ஜல்லிக்கட்டு சுதந்திரத்தை, உரிமையை பெற்று தந்தது அ.தி.மு.க., தான்.

ஜல்லிக்கட்டு உரிமையை பெற்று தந்தது, அன்னைக்கு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தான்... வெறும் அ.தி.மு.க.,ன்னு சொல்லி, அவரது பெயரை இருட்டடிப்பு பண்றீங்களே!

அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய, முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: லோக்சபா தொகுதிகள் மறுவரையறையில், மத்திய அரசு உறுதி அளித்தபடி, அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தினால், தமிழகத்தில் தற் போது உள்ள லோக்சபா தொகு திகளின் எண்ணிக்கை, 39ல் இருந்து 59 ஆக உயரும். அதே போல், உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகள் 120 ஆக இருக்கும். இவ்விரு மாநிலங்களுக்கு இடை யிலான தொகுதிகள் எண்ணிக்கை வித்தியாசம், 41ல் இருந்து 61 ஆக அதிகரிக்கும். இதன் காரணமாக, லோக்சபாவில் ஓட்டு போடும் போது, தமிழ கத்தை விட உ.பி.,க்கு அதிக மாக, 20 தொகுதிகளில், ஓட்டுகள் கூடும். அதேபோல், ஹிந்தி பேசும் பெரிய வடமாநிலங்களின் ஓட்டுகளும் அதிகரிக்கும்.

'தொகுதிகள் மறுவரையறை என்பது, பா.ஜ.,வுக்கு சாதகமாவே இருக்கும்'னு, நாசுக்கா விளக்கிட்டீங்க!

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:

அறிவார்ந்த, தெளிவார்ந்த அனுபவம் வாய்ந்தோரது சபையாக இல்லாமல், யோசிக்கும் உறுப்பினர்களாக இல்லாமல், பிறர் எழுதி கொடுப்பதை தப்பும் தவறுமாக வாசிப்பவர்களாலும், நிறைந்திருக்கிறது சட்டசபை. படைப்பவர்கள் வெளியிலும், அதை பந்திக்கு பரிமாறு வோர் உள்ளேயும் என, இரவல் மூளைகளின் இயல் இசை அரங்கேற்ற மன்றமாக சட்டசபை இருப்பது பரிதாபமே.

இவரது கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதியே, சட்டசபையில் முக்கிய விவாதங்களின் போது, எழுதி வச்சதை தானே படிக்கிறாரு!

காங்., கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேட்டி:

புதிய மாவட்ட தலைவர்களுக்கு சென்னை மாமல்லபுரத்தில், 1 கோடி ரூபாய் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. எம்.பி., ராகுல் ஆலோசனை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, கிராமங்களில் கட்சியை வலுப்படுத்த மண்டல் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக தலா ஒரு தலைவர், சட்டசபை தொகுதிக்கு தலா 32 - 35 மண்டல் தலைவர்கள் என புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

காங்., தொண்டர்கள் எல்லாரையும் நிர்வாகிகளா மாற்றும் திட்டத்தில் இறங்கிட்டீங்க போலிருக்கே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us