தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 29

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 29

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 29


PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை பற்றி, உச்ச நீதிமன்றம் நிறைய விசாரணை நடத்தியுள்ளது. நம் தரப்பு வாதங்களையும் முன் வைத்து நீதிமன்றம் வாயிலாக நியாயம் கேட்பது ஒரு வழிமுறை. அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சியாக சாலைக்கு வந்து போராட்டம் செய்வேன் என்றால் அதையும் செய்யலாம். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த போராட்டங்களால், தம்பிடி பிரயோஜனம் இருக்காதுன்னு தெரிஞ்சும், தங்களது இருப்பை காட்டிக்கவே எல்லாரும் போராட்ட களத்தில் குதிச்சிருக்காங்க!

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு: இது பண்டிகை காலம். இந்த நேரத்தில் கூட மக்கள் அனைவரும், கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படுகின்றனர். மத்திய பா.ஜ., அரசுக்கு இதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்களுக்கு ஓட்டுகளை திருட மட்டும் தெரியும். மிகப்பெரிய அளவில் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன; தொடர்ந்து திருட்டு நடக்கிறது.

நீங்க தான் ஓட்டு திருட்டுன்னு புலம்புறீங்க... எந்த ஒரு வாக்காளரும், ‘என் ஓட்டு திருடு போயிடுச்சு’ன்னு எங்கயும் புகார் தரலையே!

காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை: உ.பி.,யில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சி அளிக்கிறது . இது ஒரு சாதாரண விபத்து குறித்த கேள்வி மட்டுமல்ல; நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பில் அலட்சியத்திற்கு இடமில்லை. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மவுனம் சாதிக்காமல் பதில் சொல்ல வேண்டும்.

இது சம்பந்தமா, உயர்மட்ட விசாரணைக்கு உ.பி., மாநில பா.ஜ., அரசு உத்தரவு போட்டிருப்பது, உங்க கவனத்துக்கு வரலையா?

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி:
சிறுமி மாயம், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பவே, எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி வழக்கில் ஆதாரங்கள் இருந்திருந்தால், அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே; முன்னாள் அமைச்சர் ஒருவரை, இப்படித்தான் கைது செய்வதா?
உங்க முன்னாள் அமைச்சரின் முன்ஜாமின் மனு, நீதிமன்றத்தில் தள்ளுபடியான பிறகு தானே, அவரை கைது பண்ணியிருக்காங்க... இதுல என்ன விதிமீறலை கண்டுட்டீங்க!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us