தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 9

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 9

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 9

1


PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அறிக்கை: அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் மற்றும் செனட் ஆகிய இரு சபைகளிலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பது, குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்பின் அரசியல் அணுகுமுறைக்கும், அவரது கொள்கைகளுக்கும் எதிராக அமெரிக்க மக்கள் அளித்துள்ள முக்கியமான தீர்ப்பாகும்.

போர் வெறி, மதவாத அரசியல், குடியேற்ற எதிர்ப்பு, மக்கள் நலன்களை புறக்கணிக்கும் பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான அதிருப்தி, இந்த தேர்தலில் வெளிப்பட்டு உள்ளது.

டிரம்பின் தான்தோன்றித் தனமான செயல் பாடுகளுக்கு, அமெரிக்க மக்கள் மரண அடி கொடுத்திருக்காங்க என்று தான் சொல்லணும்!

பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: 'தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் இல்ல திருமண விழா, சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்ததை அறிந்து பெரும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்' என, தி.க., தலைவர் கி.வீரமணி கூறுகிறார். அதே திருமண விழாவிற்கு அவர் சென்று விருந்து சாப்பிட்டது ஏன்?

இதே வீரமணி, மற்ற மதங்களின் திருமண சடங்குகள் பற்றி வாயே திறக்க மாட்டாரே!

தமிழகத்தைச் சேர்ந்த, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தமிழகத்தில் எப்படியாவது ஜாதி, மத மோதலை உருவாக்க வேண்டும்; அதன்மூலம், விஜய் ஆட்சியை கவிழ்க்க வேண்டும்; என, கம்யூனிஸ்ட் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி முயற்சிக்கின்றன.

வாஸ்தவம் தான்... கரப்பான்களுக்கு ஆதரவு தந்துட்டு இருக்கும் கம்யூ., கட்சிகளிடம் முதல்வர் விஜய் ஜாக்கிரதையா இருக்கணும்!

பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேட்டி:
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் இல்ல விழாவில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடத்தப்பட்டுள்ளது; இது புதிதல்ல. தி.மு.க.,வில் உள்ள தலைவர்கள், அவர்கள் வீட்டில் ஹிந்து முறைப்படி நிகழ்ச்சிகளை நடத்துவர். அதன்பின் ஸ்டாலினை அழைத்து வந்து, 'ஷோ' காட்டுவர்; இது வழக்கம் தான். ஓட்டுக்கு பயந்து, ஹிந்து வேஷம் போட்டாலும் சரி அல்லது உள் மனதில் இருந்து ஹிந்து வேஷம் போட்டாலும் சரி, அது வரவேற்கத்தக்கது; துரைமுருகனுக்கு எனது பாராட்டுக்கள்.
சொந்த வாழ்க்கைன்னு வரும்போது, கொள்கையாவது, வெங்காயமாவதுன்னு தி.மு.க.,வினர் நினைச்சிடுவாங்களோ?


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us