தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 3

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 3

பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 3

1


PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரை, ‘பசும்பொன் முத்துராமலிங்கம்’ என்று, த.வெ.க.,வைச் சேர்ந்த பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். இது, ஆணவப் பிழை. ஜாதிய அடையாளங்களில் விருப்பமில்லாதவர்கள், அதை தங்கள் பெயரோடு இணைக்காமல் இருப்பது தவறில்லை. ஆனால், கட்டபொம்மு, பெரும்பிடுகு முத்தரையர், ராமசாமி படையாட்சி என்றெல்லாம், காலம் காலமாய் அழைக்கப்பட்ட தியாக சீலர்களின் பெயர்களை சுருக்குவதோ, குறுக்குவதோ, மாட்சிமை மிக்க அந்த தலைவர்களை இழிவு செய்வதாகும்.

வாஸ்தவம் தான்... அதே நேரம், தேசிய தலைவர் களான அம்பேத்கர், காமராஜரைக்கூட இன்றும் சிலர் ஜாதி அடையாளத்துடன் தானே பார்க்கிறாங்க!

பா.ஜ., தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: முன்னாள் முதல்வர் பெயரை த.வெ.க., அமைச்சர் ஒருவர் கருணாநிதி என்று சொன்னதற்கே மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய், முத்துராமலிங்க தேவர் பெயரை முழுமையாக குறிப்பிடாமல் அவமதித்த ஆதவ் அர்ஜுனாவை மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த மாதிரி சின்ன தவறுக்கெல்லாம், ‘அமைச் சரவையில் இருந்து நீக்கணும்’னு கேட்பது, உங்களுக்கே, ‘ஓவரா’ தெரியலை!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் பேட்டி: தமிழகத்தில் முக்கியமான 100 இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கி வந்தன. பத்திரப்பதிவு அலுவலகங்கள் இனி சனிக்கிழமை செயல்படாது. கடந்த ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். தற்போது, ஊழலற்ற துறைகளாக மாறி வருகின்றன. மக்களுக்கு நண்பனாகச் செயல்படும் துறையாகவும், சேவை எளிதாக கிடைக்கும் வகையிலும் உள்ளது.

பத்திரப்பதிவு துறையில் லஞ்சத்தை ஒழிச்சிட்டதால, ‘வாரத்தில் ஆறு நாட்களும் வேலை பார்த்து என்ன பிரயோஜனம்’னு, அந்த துறை அதிகாரிகள், ஊழியர்கள் நினைச்சிட்டாங்களோ?

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி:


கடந்த தி.மு.க., ஆட்சி என்பது வரலாறு காணாத ஊழல் ஆட்சி. எனவே, பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் போல, அந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனைவரையும் விசாரிக்க வேண்டும்.
- இப்ப தானே மகேஷ் சிக்கியிருக்காரு... அடுத்து நேரு, எ.வ.வேலு, துரைமுருகன்னு சீனியர்கள் எல்லாம் வரிசையா சிக்குவாங்க பாருங்க!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us