PUBLISHED ON : ஜன 05, 2026 03:14 AM

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 125 நாள் வேலை உறுதி திட்டத்தின் புது சட்டத்தை கண்டித்து, சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன், தி.மு.க., கூட்டணி சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேடையில் இருந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'இங்கே போடுற கோஷம், பிரதமர் மோடிக்கு கேட்கணும்' என, 125 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பார்த்து கூறினார். ஆனால், மேடையின் கீழ் இருந்த தொழிலாளர்களில் சிலரை தவிர மற்றவர்கள், மவுனமாகவே இருந்தனர்.
கூட்டத்தில் இருந்த தி.மு.க., தொண்டர் ஒருவர், 'இவங்களுக்காகத்தான் நாம போராட்டமே நடத்துறோம்... ஆனா, இவங்க அமைதியா இருக்காங்களே...' என்றார்.
அதற்கு மற்றொரு தொண்டர், 'கட்சிக்காரங்க கூப்பிட்டதால், பழக்க தோஷத்துல கட்சி கூட்டம்னு வந்துட்டாங்க... அதான், அமைதியா இருக்காங்க' எனக் கூற, சக தொண்டர்கள் சிரித் தபடியே கிளம்பினர்.

