PUBLISHED ON : ஜன 26, 2026 02:13 AM

'உதயநிதிக்கு பதிலடி தந்துட்டாரே!'
திண்டுக்கல் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், 'அரசியலில், ஓய்வு என்பதே கிடையாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஓய்வு பெறுவோம் என கனவு காணாதீர்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி, 96 வயது வரை அரசியல் செய்தார். அதுபோல, முதல்வர் ஸ்டாலின், 100 வயது வரைக்கும் தமிழகத்தை ஆளப்போகிறார்.
'கட்சியினரான நாம் அனைவரும் ஒரே குடும்பம். இந்த குடும்பத்தின் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது முதல்வர் ஸ்டாலின்; அடுத்து உதயநிதி வருவார்...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'வர்ற தேர்தலில், 'சீ னியர்'களுக்கு 'சீட்' இருக்காதுன்னு உதயநிதி தரப்பினர் தகவல்களை பரப்பிட்டு இருக்காங்க... அதுக்கு பதிலடி தர்ற மாதிரி அண்ணன் பேசிட்டாரே...' என கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

