PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

ஆர்.கந்தசாமி, கும்பகோணத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் ஒரு திட்டமான பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில், தமிழகம் கையெழுத்திடாது' என, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை முதல்வரும், கல்வி அமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் மட்டுமே சொல்லி வந்ததை, இப்போது கல்வித் துறை அதிகாரிகளும் வழிமொழியத் துவங்கியுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள் முன்னேறி விடக் கூடாது என்ற கொள்கையை, ஆட்சியில் இருக்கும் வரை கைவிட மாட்டோம் என்பதை கல்வித்துறை அதிகாரிகளை வைத்து சூசகமாக கூறியுள்ளது, திராவிட மாடல் அரசு.
தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தங்கள் மாநில மாணவர்கள் மூன்று மொழிகள் மட்டுமல்ல; 10 மொழிகளை கூட கற்க அனுமதிப்பேன் என்று கூறுகிறார்.
'தாய் மொழியை காப்பதற்காக, ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழியை கற்க வேண்டும். ஏனைய மொழிகளை எதிர்கால நலனுக்காக கற்க வேண்டும்' என்கிறார், சந்திரபாபு நாயுடு.
ஆனால், தமிழகத்திலோ இருமொழி கொள்கையை, மாணவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்து, அவர்களை உருப்படவிட மாட்டோம் என்கின்றது, திராவிட மாடல் அரசு.
இன்றைய காலகட்டத்தில் இருமொழி கொள்கையின் வாயிலாக படித்து வெளியே வரும் மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர், தமிழகத்திலும், வெளிமாநிலங்களிலும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்ற தரவு களை தி.மு.க., அரசால் கொடுக்க முடியுமா?
இருமொழி கொள்கையில் அரைகுறையாக படித்து, டாஸ்மாக் கடை திறந்தவுடன் மதுவை வாங்கி குடித்து, மட்டையாகி பிளாட்பாரங்களில் விழுந்து கிடக்க வேண்டியதுதான்.
ஆட்சியாளர்கள் அதைத்தானே எதிர்பார்க்கின்றனர்!
மாணவர்களின் எதிர்கால நலன் காக்கப்பட வேண்டும் என்றால், தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
என்ன செய்யப் போகின்றனர் தமிழக வாக்காளர்கள்?
வாயால் வடை சுடும் ராகுல்! ஜி.சூர்யநாராயணன், விழுப்புரத்தில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓர் ஊருக்கு புதிதாக ஒருவர் வருகிறார்.
பார்ப்பதற்கு படித்தவர் போல் தெரியும் அவர், மற்றவர்கள் முன் தன்னை
உயர்த்திக் கொள்ள, அறிவாளி போல் பேசுகிறார்.
அவர் பேச்சில் உண்மைத்தன்மை இல்லாததால், மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.
இதனால், எப்படியாவது அவர்களை தன் பேச்சை கேட்க வைத்து விட வேண்டும் என
எண்ணி, ஒருநாள் அவர்களிடம், 'நான் உங்களுக்கு பல அதிசயங்களை காண்பிக்கப்
போகிறேன். என் பின்னால் வாருங்கள்' என்றார்.
அப்படி என்ன
அதிசயத்தை காண்பிக்க போகிறார் என்று எண்ணி, மக்களும் அவர் பின்
செல்கின்றனர். வானத்தில் எதையோ காண்பித்து, 'அதோ துாரத்தில் வெள்ளை காக்கா
பறக்கிறது பாருங்கள்...' என்றார். 'ஒன்றும் தெரியவில்லையே...' என்று
மக்கள் கூறியபோது, 'அருகில் வந்த பின் படம் பிடித்து காட்டுகிறேன்' என்று
சொல்லி விட்டு சென்று விட்டார்.
சில நாட்கள் கழித்து, அதேபோன்று மக்களை கூப்பிட்டு, 'அதோ பாருங்கள்... முதலை பறந்து போகிறது...' என்றார்.
இப்படியே ஒவ்வொரு மாதமும், 'யானை, புலி வேஷம் போட்டு வருகிறது, பூனை
நெருப்பில் நீந்துகிறது' என்று ஏதாவது ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார்.
இதனால் கடுப்பான மக்கள், 'முதலில் நீங்கள் சொன்னதில் ஏதாவது ஒன்றை உண்மை
என்று நிரூபியுங்கள். பின், அதிசயத்தை காட்டலாம்' என்று கூறிவிட்டு சென்று
விட்டனர்.
இக்கதையில், அதிசயத்தை காட்டுவதாக கூறும் மனிதரை போன்றுதான், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பேச்சும், செயலும் உள்ளது.
மஹாத்மா காந்தியை கொன்ற இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்., என்றார். ரபேல் ஊழல்
என்று புரளியை கிளப்பினார், ஓட்டு இயந்திரத்தின் வாயிலாக மோசடி நடக்கிறது
என்றார்; பின், ஓட்டு திருட்டு என்றார். இப்போது, ஹைட்ரஜன் பாம் என்ற
பெயரில், ஒரு நமத்து போன ஊசி பட்டாசை எடுத்து வந்து, ஹரியானாவில் ஆட்சி
திருட்டு என்கிறார்.
இதுவரை சொன்ன குற்றச்சாட்டுகளில் எதையாவது ஒன்றை ராகுல் நிரூபித்துள்ளாரா?
பட்டாசு என்று காகிதத்தில் எழுதி, படார் என்று வாயால் சத்தம்
எழுப்புவதற்கு பெயர் பட்டாசு வெடிப்பது அல்ல; பத்த வைத்ததும் வெடிக்க
வேண்டும், அதற்கு பெயர் தான் பட்டாசு!
ஜியோ கம்பெனியின் முதலாளி,
அம்பானியா, அதானியா என்று கூட தெரியாத இவர், பிரதமர்மோடியை கிண்டல்
செய்வதைப் பார்த்தால், 'ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி'
என்ற பட்டுக்கோட்டையார் பாடல் தான் நினைவுக்கு வருகிறது!
பொய் எத்தனை நாள் கைகொடுக்கும்? எஸ்.ராம் பிரேமி, கோவையிலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
திருத்தப் பணியை எதிர்த்து, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் போர்
கொடி துாக்கியுள்ளன.
அதற்கு காரணங்களாக, தங்கள் கற்பனைக்கு தோன்றிய விஷயங்ளை எல்லாம்முன் வைக்கின்றன.
கிறிஸ்துமஸ் மற்றும் பொங் கல் பண்டிகை வருவதால், வாக்காளர்கள் சிரமத்
திற்கு உள்ளாகி, ஓட்டுரிமையை இழந்து விடுவராம். அத்துடன் இது
மழைக்காலமாம்... மக்கள் சிரமப்படுவராம்!
திராவிட மாடல் ஆட்சியில்
மக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மகிழ்ச்சியில் திளைத்துக்
கொண்டிருக்கின்றனர் பாருங்கள்... வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியால்
அவர்கள் சிரமம் அடைய!
வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண் குழந்தைகள், பத்திரமாக வீடு திரும்ப முடியவில்லை. சட்டம் - ஒழுங்கு அந்த லட்சணத்தில் உள்ளது.
வீதிதோறும் மதுக்கடைகளை திறந்து வைத்து, 10 வயது சிறுவன் முதல், பல் போன
முதியோர் வரை அத்தனை பேரையும் குடிகாரர்களாக்கி, அவர்கள் வீட்டு பெண்களை
கண்ணீர் கடலில் தள்ளியாச்சு.
இதில், இறந்து போனவர்கள் பெயரையும்,
இடம்மாறி போனவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் நீக்குவதுதான்
மக்களுக்கு சிரமத்தை தருமாம்... என்னே கரிசனம்!
ஆடு நனையுதேன்னு
ஓநாய் அழுத கதையாக உள்ளது, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கூறும் காரணங்கள்!
சிறப்பு திருத்த பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டிருந்தால்,
திரும்ப சேர்க்கலாம் என்பது, தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி
கட்சிகளுக்கும் தெரியாதா?
திருத்த பட்டியல் வெளி வந்தால்,
தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற முடியாதே என்ற பயம்... அதனால்,
ஓட்டுரிமை பறிபோ கும் என்ற பொய் நாடகத்தை அரங்கேற்றுகின்றன, தி.மு.க.,
அண்ட் கோ!
எத்தனை காலம் தான் மக்களை ஏய்த்து பிழைக்க முடியும்... பொய் எத்தனை நாள் தான் கைகொடுக்கும்?

