/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பரிகாரம் செய்யும் பகுத்தறிவாளர்கள்!
/
பரிகாரம் செய்யும் பகுத்தறிவாளர்கள்!
PUBLISHED ON : நவ 11, 2025 12:00 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் ஒரு கோவில் பணியாளர் தேர்வு நேர் காணலில், அறநிலையத் துறை அதிகாரிகள், ஈ.வெ.ரா., மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து கேள்விகள் கேட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆன்மிகவாதிகளிடம் கோவில்கள் இருந்தால் தானே தேவாரம், திருவாசகம், தல வரலாறு குறித்து கேள்வி கேட்பர்.
கடவுளை துாற்றுவோர், சனாதன தர்மத்தை ஏசுவோர், ஹிந்து மதத்தை டெங்கு, மலேரியா கொசுவுடன் ஒப்பிடும் கூட்டத்திடம் கோவில்கள் இருந்தால், ஈ.வெ.ரா., குறித்து என்ன, திருமணம் தாண்டிய உறவுகளில் திளைப்பது எப்படி என்பது போன்ற கேள்விகளைக் கூட கேட்பர். ஏன் என்றால், அவர்கள் வந்த பாதையும், வாழும் பாதையும் அது ஒன்று தான்!
'கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி' என்று சொன்ன ஈ.வெ.ராமசாமியை, 'கடவுளின் கோபுரத்தை தரிசித்துக் கொண்டே இரு; அப்போதுதான் நீர் செய்த பாவம் போகும்' என்பது போல், கோவில்கள் முன் ஈ.வெ.ரா.,வின் உருவ சிலையை அமைத்த அதிபுத்திசாலிகள்...
ஹிந்து கடவுள்களை துவேசித்த அண்ணாதுரையின் நினைவு தினத்தில், கோவில்களில் அன்னதானம் இட்டு பரிகாரம் செய்யும் பகுத்தறிவாளர்கள் தானே திராவிட மாடல் ஆட்சியாளர்கள்!
அவர்களது ஆட்சியில் கோவில் பணிக்கான நேர்காணலில், திராவிட சித்தாந்தம் குறித்த கேள்வி கேட்காமல், சைவ சித்தாந்தம் குறித்தா கேள்வி கேட்பர்?
முதல்வர் அறியவில்லையா? எஸ்.உலகராஜன், சென்னையில் இருந்து எழுதுகிறார்:
'தமிழகத்தை தலை குனிய விட மாட்டேன்' என் கிறார், முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தின் கடன் தொகை 2020 வரை நான் கரை லட்சம் கோடி ரூபாயாக இருந்த
நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில், 10 லட்சம்
கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதை கண்டு, தமிழகம் தலைகுனிந்துள்ளதே!
கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் சபரிமலை ஐயப்பனை கேலி செய்யும் விதமாக,
'ஐயப்பா நாங்கள் வந்தால் என்னப்பா?' என்று கானா பாடகி ஒருவர் கிண்டல்
செய்து பாடியபோது, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்த வழக்கில் அவரை கைது
செய்யாமல், பொம்மை முதல்வராக நின்றதை பார்த்து தமிழகம் தலைகுனிந்ததே!
பாலியல் குற்றவாளி ஞானசேகரன், தி.மு.க., ஆதரவாளர் என்பதுடன்,
அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்திருந்த நிலையிலும், 'ஞானசேகரன் தி.மு.க.,
ஆதரவாளர் அல்ல; அனுதாபி' என்று ஸ்டாலின் கூறியபோது தமிழகம் தலைகுனிந்ததே...
கட்சிக்கு உழைத்தவர் களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, முதல்வர் தன்
மகன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்த போது, ' குடும்ப ஆட்சிக்கு
வித்திட்டு விட்டோமே' என்று தமிழகம் தலைகுனிகிறதே!
கவர்னருடனும்,
மத்திய அரசிடமும் இணக்கமாக இல்லாமல், தினமும் மோதல் போக்கை கையாண்டு, பல
வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்திற்கு வராமல், வேறு மாநிலத்திற்கு செல்ல
ஸ்டாலின் காரணமாக இருப்பதை கண்டு தமிழகம் தலைகுனிந்துள்ளதை முதல்வர்
அறியவில்லையா?
கூக்குரல் இடுவது ஏன்? மதனகோபாலன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஹரியானா சட்டசபை
தேர்தலில், 25 லட்சம் போலி வாக்காளர்கள் வாயிலாக, காங்கிரஸ் வெற்றியை
பா.ஜ., தட்டிப்பறித்தது என்று குற்றஞ்சாட்டியுள்ளார், லோக்சபா எதிர்க்கட்சி
தலைவர் ராகுல்.
ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு முன், அம்
மாநிலத்தின் பா.ஜ., தலைவரும், தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி
பத்திரிகையாளர் சந்திப்பில், 'நாங்கள் பெரும்பான்மை ஆதரவுடன் வெல்வோம்,
எங்களிடம் எல்லா ஏற்பாடு களும் உள்ளன' என சிரித்துக் கொண்டே கூறினாராம்.
அதனால், பா.ஜ., திட்டமிட்டே ஓட்டு திருட்டை நடத்தியுள்ளதாக கூறுகிறார்,
ராகுல்.
நயாப் சிங் சைனி சொல்ல விழைந்தது, 'நாங்கள் தீவிரமாக அரசியல் பணி செய்கிறோம். எங்கள் தொண்டர்கள் களத்தில் உள்ளனர்.
'ஆர்.எஸ்.எஸ்., பக்கபல மாக உள்ளது, வாக்காளர்களை வீடு வீடாக சென்று
சந்திக்கிறோம். அவர்களை ஓட்டளிக்கும் மையத்திற்கு அழைத்துச் செல்கிறோம்'
என்பது கூட, அவர் கூறிய, 'ஏற்பாட்டின்' அர்த்தமாக இருக்கலாம். அதை,
குயுக்தியா அர்த்தம் செய்து கொண்டு ஓட்டு திருட்டு என்கிறார், ராகுல்.
சரி... அப்படியே ஓட்டு திருட்டு நடந்திருந்தால், அதை தடுக்க வேண்டிய, 'இண்டியா' கூட்டணியினர் என்ன நடவடிக்கை எடுத்தனர்?
மேலும், பிரேசில் நாட்டின் மாடல் மேத்யூஸ் பெரெரோ என்ற பெண்ணின்
புகைப்படம், 22 இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது
என்கிறார், ராகுல். மேத்யூஸ் பெரெரோ என்பது பெண் அல்ல; மாடலின்
புகைப்படத்தை எடுத்த ஆணின் பெயர் என்பது வேறு விஷயம்.
இதேபோன்று,
2018 உ.பி., தேர்தலில் துர்காவதி என்ற பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக,
பாலிவுட் நடிகை சன்னி லியோன் படம் இடம் பெற்று இருந்தது. அதனால்,
துர்காவதிக்கு பதிலாக சன்னி லியோன் வந்து ஓட்டளித்ததாக எடுத்துக் கொள்ள
முடியுமா?
அதேபோன்று, சமாஜ்வாதி கட்சி முன்னாள் அமைச்சர் நாரத்
ராய் புகைப் படத்திற்கு பதிலாக, யானை யின் படமும், குனவர் அங்கூர் சிங்
என்பவரின் புகைப்படத்திற்கு பதில் மானின் படமும் இடம்பெற்றிருந்தன. அதற்காக
அந்த விலங்குகள் வந்தா ஓட்டளித்தன?
மேலும், ஒரே பெண் இரண்டு ஓட்டுச் சாவடிகளில், 223 தடவை ஓட்டு போட்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார், ராகுல்.
ஓட்டு போடுவது சராசரியாக, 10லிருந்து 11 மணி நேரம் நடக்கிறது. இந்த, 10,
11 மணி நேரத்தில், ஒருவர், 223 முறை ஓட்டு போட வேண்டும் என்றால், ஒரு மணி
நேரத்தில், 20 முறை ஓட்டளிக்க வேண்டும்.
அதாவது, மூன்றுநிமிடத்திற்கு ஒருமுறை ஓட்டளிக்க வேண்டும். இது எப்படி நடைமுறைக்கு சாத்தியமாகும்?
அதேபோன்று, குடிசைப் பகுதியில் வசிப்போரின் வீடுகளுக்கு வீட்டு எண் இல்லாத
பட் சத்தில், '0' என குறிப்பிடுவது காங்., ஆட்சிக்காலத்தில் இருந்து
பின்பற்றப்பட்டு வருகிறது. இதை, தேர்தல் ஆணையம் ஏதோ உள்நோக்கத்துடன் செய்து
உள்ளது மாதிரி, இதுவே ஓட்டு திருட்டுக்கு ஆதாரம் என்கிறார், ராகுல்.
இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை, 90 கோடி. இத்தகைய தவறுகள் உள்ளூர்
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் வாயிலாக நடக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
வாக்காளர் பட்டியலில்பிழைகள், தவறான புகைப்படங்கள், பெயர்கள், முகவரிகள் இருக்கலாம் என தேர்தல் கமிஷனே கூறுகிறது.
சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமே, ராகுல் கூறும் இது போன்ற தவறுகளை
சரிசெய்வதுடன், இறந்தவர்கள் பெயரை நீக்குவது, முகவரி மாற்றம் நடைபெற்று
இருந்தால் அதை சரிசெய்வது தான் எனும் போது, அதை எதிர்த்து ராகுலும், அவரது
கூட்டணி கட்சியினரும் கூக்குரல் இடுவது ஏன்?

