sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ஏழை பங்காளனின் பங்களா பாரீர்!

/

ஏழை பங்காளனின் பங்களா பாரீர்!

ஏழை பங்காளனின் பங்களா பாரீர்!

ஏழை பங்காளனின் பங்களா பாரீர்!

9


PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.சோமு, தஞ்சையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 1967 சட்டசபைதேர்தலின் போது, காமராஜர் வசித்து வந்த, தி.நகர், திருமலைப் பிள்ளை சாலை கட்டடத்தை படம் பிடித்து, போஸ்டர் அடித்து, 'ஏழைப் பங்காளனின் பங்களா பாரீர்' என, மாநிலம் முழுதும் ஒட்டிய மகானுபாவர்கள் தி.மு.க.,வினர்.

உண்மையில் அந்த பங்களா, ஒரு மார்வாரிக்கு சொந்தமானது. காங்கிரஸ் கட்சி தான், அந்த கட்டடத்துக்கு மாத வாடகை கட்டிக் கொண்டிருந்தது. காமராஜர்முதல்வராக இருந்த காலத்திலிருந்து, அந்த பங்களாவில் தான் வசித்து வந்தார்.

பொய்யையும், புரட்டையும், புளுகையும்,உண்மை போலவே பிரசாரம் செய்வதில், தி.மு.க.,வை எந்த அரசியல் கட்சியும் அடித்துக்கொள்ள முடியாது.

அந்த தி.மு.க.,வையே முழுங்கி ஏப்பம்விட்டு, ஏதுமறியாத அப்பாவி போல காட்சியளித்து கொண்டிருக்கிறார், டில்லியைஆட்சி செய்த அரவிந்த் கெஜ்ரிவால்.

சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் பிரபலம், இந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அரசியலில் பரிமளிக்க வைத்து, டில்லி முதல்வர் ஆசனத்திலும் அமர வைத்தது.

ஆட்சி பீடத்தில் அமர்ந்து கோலோச்ச துவங்கியதும், அன்னாரின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து தொலைத்தது.

அரசு அலுவலரானாலும் சரி; அரசு அதிகாரியானாலும் சரி; மக்கள் பிரதிநிதிகள்ஆனாலும் சரி; அமைச்சரானாலும் சரி; அரசு அளிக்கும் குடியிருப்புகளில், பதவியில்இருக்கும் வரையில் தான் வசிக்க முடியும். அரசு அலுவலர் பணி மூப்படைந்தாலும், மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தாலும் உடனடியாக அரசு குடியிருப்பைகாலி செய்து கொடுத்து விட வேண்டும்.

குடியிருப்புகளில் ஏதாவது கூடுதல் வசதிகள் வேண்டுமானால், அதை மத்தியபொதுப்பணித் துறை தான் செய்து தரவேண்டுமேயன்றி, சொந்த செலவில் எதுவும்செய்து விடக்கூடாது; இதுதான் விதிமுறை.

ஆனால், புதுமுக ஏழைப்பங்களான் அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்துஇருக்கிறார் தெரியுமா?

அரசு நிதியை தவறான முறையில் கையாண்டு, 4 கோடி ரூபாயில் ஜன்னல் திரைச்சீலைகளை மாற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி, 64 லட்சம் ரூபாய் செலவில், 16 அதி நவீன தொலைக்காட்சிகளும்,10 லட்சம் ரூபாய் மதிப்பில் சாய்தள சோபாக்களும், 19.5 லட்சம் ரூபாய் மதிப்பில்ஸ்மார்ட் எல்.இ.டி., விளக்குகளும், 9 லட்சம்ரூபாய் மதிப்பில் நவீன சமையலறையும்,சிறந்த குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளுக்காக 15 கோடி ரூபாயும், அலங்காரதுாண்களுக்காக 36 லட்சம் ரூபாயும், 12 லட்சம் ரூபாய் செலவில் நவீன கழிப்பறை வசதியும் செய்து இருக்கிறார்.

நல்ல வேளை... துடைத்து போடும் 'டிஷ்யூ' பேப்பருக்கு பதிலாக, பத்து பதினைந்து கோடிகளில் பட்டுத்துணிகளைவாங்கி அடுக்கி வைக்காமல் விட்டு விட்டார் என்று நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

மதுபான கொள்கையில் அடித்த கொள்ளையில் இருந்து செலவு செய்துஇருந்தாலும் கூட, 'அடடா...' என்று சொல்லலாம்; ஆனால், கெஜ்ரிவால் அரசு நிதியை தான் முறைகேடாக கபளீகரம் செய்திருக்கிறார்.

தாய் எட்டடி பாய்ந்தால், மகள் பதினாறுஅடி பாய வேண்டாமா? பாய்ந்திருக்கிறார் முதல்வர் ஆதிஷி. 'இந்த குற்றச்சாட்டுக்குஎல்லாம் அசர மாட்டோம்' என்று ஊதி இருக்கிறார்.

இந்த நாட்டு சட்டங்களை குறைசொல்வதா அல்லது நமக்கு ஒன்றும் தெரியவில்லையா?



ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


வி.ரகுராமன், மதுரையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: கடந்த சில மாதங்களாக, நாடெங்கும் ரயில்களை கவிழ்க்க முயற்சிக்கும் சதிகள், தினமும் நடந்த வண்ணம் இருக்கின்றன. விமான நிலையங்களுக்கும்,பள்ளிக்கூடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்களும்தொடருகின்றன.

இச்சதிகளின் பின்னால்எந்த தீய சக்திகள் இருக்கின்றன என்று தெரியவில்லை.

கடந்த ஆகஸ்ட்டில், பாகிஸ்தானின் தீவிரவாதிஒருவன், நம் நாட்டில் ரயில்களை கவிழ்ப்பதற்கும்,வெடிகுண்டு வைப்பதற்கும்நம் நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களை துாண்டிவிடும் வகையில்பேசியதாக தகவல் வெளியாகியது. 2047க்குள் நம் நாட்டை, இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என்ற கருத்தையும், சில தீய சக்திகள் பரப்ப முயற்சிக்கின்றன என்ற தகவல்களும் வருகின்றன.

இதற்கும், தற்போது நடக்கும் சதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பொது மக்களின் மனதில் நிலவுகிறது. இது உண்மையாய் இருந்தால், நம் இஸ்லாமியசமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள்...

அன்பர்களே, தயவுசெய்து இதுபோன்ற வெளி நாட்டு, உள்நாட்டு சதிகாரர்களின் மாய வலையில் விழுந்து, உங்களது வாழ்க்கையை அழித்துக் கொள்ளாதீர்கள். துாண்டி விடுபவர்கள் தப்பி விடுவர்; பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே.

சில ரயில்களை கவிழ்ப்பதன் வாயிலாகவோ, மிரட்டல்கள் மூலமோ, நம் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முடியுமாஎன்று யோசித்திப் பாருங்கள். தீவிரவாதத்தைதுாண்டிவிட்ட பாக்.,கின் இன்றைய அவல நிலையை பாருங்கள்... அங்குள்ள அப்பாவி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் படும் அவதியை பாருங்கள்...தீவிரவாத்திற்கு அடித்தளம் இட்ட ஆப்கானிஸ்தானின் நிலையை பாருங்கள்...

தீவிரவாதத்தை ஆதரிக்கும்எந்த நாடும் கடைசியில் அழிவைத்தான் சந்திக்கும் என்பது நாம் கண்கூடாக காணும் வரலாறு.

ஆகவே, இத்தகைய தீய சக்திகளால் துாண்டப்பட்டிருந்தால், அது நம் எல்லாருக்கும், குறிப்பாக, நம் நாட்டில்வாழும், 20 கோடி இஸ்லாமிய மக்களுக்கும்மிகப்பெரிய அழிவைத்தான்தரும் என்பது உறுதி.

ஹிந்து மதவாதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்...

நம் நாடு, உலகில் உள்ள மற்ற நாடுகளில் இருந்து மிகவும் வேறுபட்டது. பல நுாற்றாண்டுகளாக, பலதரப்பட்ட இனங்களும், மொழிகளும்,கலாசாரங்களும் சேர்ந்து தழைக்கும் நாடு இது. உலகில் எந்த நாடும், நம் நாடு போல கிடையாது.

இங்கு மதவாதம், ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.இந்திய மக்கள் தொகையில்,30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சிறுபான்மையினர்.இவர்களை ஒதுக்கியோ, பயமுறுத்தியோ, இழிவுபடுத்தியோ, உதாசீனப்படுத்தியோ எந்த அரசும் வெற்றி பெற முடியாது; அது வெறுப்பைத்தான் துாண்டும்.

சிறுபான்மையினர்மீதான வெறுப்பு, நாட்டை அழிவுப்பாதையில்தான் கொண்டு செல்லும்.எல்லா இனத்தவரையும்,மதத்தினரையும் அணைத்து, அரவணைத்து,மதித்து செல்லும் ஒருவரே இங்கு வெற்றிபெற முடியும்.

ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு; நம்மில் ஒற்றுமைநீங்கில் அனைவருக்கும் தாழ்வு!








      Dinamalar
      Follow us