/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தே.ஜ., கூட்டணியை விமர்சித்து போஸ்டர்
/
தே.ஜ., கூட்டணியை விமர்சித்து போஸ்டர்
ADDED : ஜன 28, 2026 08:09 AM

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியின், 'இரட்டை இன்ஜின் அரசு' அமைவது உறுதி' என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'டபுள் இன்ஜின் எனும் டப்பா இன்ஜின் தமிழகத்தில் ஓடாது' என விமர்சித்தார்.
இந்நிலையில், தே.ஜ., கூட்டணியை விமர்சித்து, துாத்துக்குடி, கோவில்பட்டி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், என்.டி.ஏ., என்ற அழுக்குப்படிந்த பழைய ரயிலில், பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோர் தொங்கியபடி செல்வது போல இடம் பெற்றுள்ளது. இடம்: ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

