/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பிராட்மேன் தொப்பி ரூ. 2.93 கோடிக்கு ஏலம்
/
பிராட்மேன் தொப்பி ரூ. 2.93 கோடிக்கு ஏலம்
ADDED : ஜன 28, 2026 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன். கடந்த 1947-48ல் இந்திய அணி சுதந்திரம் அடைந்த பின் முதன் முறையாக ஆஸ்திரேலியா சென்றது.
இந்தியாவின் ரங்கா சொஹோனி, முதல் பந்து வீசினார். சொந்தமண்ணில் பிராட்மேன் பங்கேற்ற, இந்தியாவுக்கு எதிரான கடைசி தொடர் இது.
இத்தொடரில் பிராட்மேன் அணிந்திருந்த பச்சை நிற தொப்பியை, ரங்காவிடம் வழங்கினார். இதை ரங்கா குடும்பத்தினர் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தனர். இத்தொப்பி ஏலம் விடப்பட்டது. பெயர் தெரிவிக்காத ஒருவர், ரூ. 2.93 கோடிக்கு வாங்கினார்.

