sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஏப் 21, 2026 01:17 AM

Google News

PUBLISHED ON : ஏப் 21, 2026 01:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்., கட்சியை சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை எப்படி சமரசம் செய்தாரோ, அதேபோல் தமிழகத்தை ஆள, சமரசம் செய்யப்பட்ட முதல்வர், பா.ஜ.,வுக்கு தேவைப்படுகிறது. நாங்கள் கூட்டணி கட்சிகளை சமமாக நடத்துகிறோம்; ஆனால், பா.ஜ., புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி, கூட்டணி கட்சிகளை மிரட்டுகிறது. மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை மிரட்டி பணிய வைத்ததில்லை.

டவுட் தனபாலு: அடடா... 2011ல் தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் முதல் மாடியில் சி.பி.ஐ.,யை அனுப்பி, 'ரெய்டு' நடத்தி, கீழ்தளத்தில் தி.மு.க.,வை மிரட்டி, 63 சட்டசபை தொகுதிகளை காங்., வாங்கியதை, நீங்க மறந்துட்டாலும், தி.மு.க.,வினர் மறந்திருக்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll



வி.சி.க., தலைவர் திருமாவளவன்: த.வெ.க.,விற்கு பா.ஜ., கொள்கை எதிரி என்றால், அவர்களை தனிமைப்படுத்த விஜய் ஏன் முயற்சிக்கவில்லை. அ.தி.மு.க.,வுடன் விஜய் சேர்ந்திருந்தால், பா.ஜ., தனிமைப்பட்டு இருக்கும். அவருக்கு பா.ஜ., எதிர்ப்பு இல்லை; தி.மு.க., எதிர்ப்பு தான் உள்ளது. எனவே, த.வெ.க.,விற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், பா.ஜ.,விற்கு மறைமுகமாக உதவும்.

டவுட் தனபாலு: ஒருவேளை, அ.தி.மு.க.,வுடன் விஜய் சேர்ந்திருந்தால், அந்த கூட்டணி வெற்றி கூட்டணியா மாறியிருக்கும்... தி.மு.க., அணியில் சுயமரியாதை இல்லாம நீடிப்பதை விட, அ.தி.மு.க., கூட்டணிக்கு போயிருக்கலாம்னு திட்டம் ஏதும் வச்சிருந்தீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் சசிகலா: சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க., அரசு உயர்த்தி, மக்களிடம் இருந்தே ஒவ்வொரு மாதமும், 7,000 ரூபாய் வசூலித்துக் கொள்கின்றனர். உங்களிடம் வசூலித்த பணத்தில் இருந்து, மகளிர் உரிமைத் தொகையாக, 1,000 ரூபாயை உங்களுக்கே தருகின்றனர். ஆட்சி செய்யவே இவர்களுக்கு தெரியவில்லை. எனவே, நாம் களத்தில் இறங்கினால் தான் சரியாக இருக்கும் என்பதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன்.

டவுட் தனபாலு: உங்க தோழி ஜெயலலிதா மறைந்த பிறகு, நேரடி அரசியலுக்கு வந்து, முதல்வராக திட்டம் போட்டீங்க... ஆனா, சொத்து குவிப்பு வழக்குல, பெங்களூரு ஜெயிலுக்கு போனது தான் மிச்சம்... இப்ப ரெண்டாவது முறையா நேரடி அரசியலுக்கு வந்திருக்கீங்க... என்ன நடக்க போகுதோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?

lll






      Dinamalar
      Follow us