தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘உளறலுக்கு பதில் இல்லை!’

‘உளறலுக்கு பதில் இல்லை!’

‘உளறலுக்கு பதில் இல்லை!’


PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘எங்களை மட்டும் வாரிசு அரசியல் என துாற்றுகின்றனர்; இப்போது இதற்கு என்ன பதில் சொல்ல போகின்றனர்...’ என, பா.ஜ.,வினரை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள்.

ம.பி.,யில், முதல்வர் மோகன் யாதவ் தலைமை யில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில பா.ஜ.,வில், முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான், மற்றொரு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முக்கியமானவர்கள்.

இவர்களில், ஜோதி ராதித்ய சிந்தியாவின் மகன் மகாநார்யமன் சிந்தியா, மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகிக்கிறார்.

சிவ்ராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேயா சவுகான், ம.பி., மாநில கைப்பந்து சங்க தலைவரா க சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை வைத்து, காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக பா.ஜ.,வினர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

‘எங்கள் கட்சி தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் இருப்பதை காரணமாக கூறி வாரிசு கட்சி, குடும்ப கட்சி என பா.ஜ.,வினர் விமர்சித்து வருகின்றனர். பா.ஜ., மூத்த தலைவர்களின் மகன்கள், விளையாட்டு அமைப்புகளின் தலைவராக பதவி வகிப்பதை என்ன சொல்லி சமாளிக்க போகின்றனர்...’ என, காங்கிரசார் கேட்கின்றனர்.

ம.பி., மாநில பா.ஜ.,வினரோ, ‘விளையாட்டுக்கும், அரசியலுக்கும் வேறுபாடு தெரியாமல் உளறி கொட்டினால், அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா...?’ என கிண்டல் அடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us