தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘அரசியல் நாகரிகம்!’

‘அரசியல் நாகரிகம்!’

‘அரசியல் நாகரிகம்!’


PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘கட்சிக்காரர்களை மதிக்காமல் செயல்படும் மேலிடத்துக்கு இது நல்ல பாடம்...’ என, சமாஜ்வாதி கட்சி தலைமையை, அக்கட்சியின் நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி சார்பில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான வேட்பாளர் தேர்வுசமீபத்தில் நடந்தது. இதில், கட்சியின்மூத்த தலைவர்கள் பலர், ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்தனர்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவோ, கட்சிக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத பிரபல தொழிலதிபர் தன்ராஜ் பரிமல் நாத்வானி என்பவருக்கு சீட் கொடுத்துள்ளார். இது, சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், குஜராத் முதல்வர் மற்றும் பிரதமர் பதவியில் நரேந்திர மோடி, 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார், தன்ராஜ் பரிமல் நாத்வானி.

இது, சமாஜ்வாதி கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘காலங்காலமாக கட்சிக்காக உழைத்து, ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் எங்களுக்கு சீட் தராமல், தொழிலதிபருக்கு சிவப்பு கம்பளம் விரித்தால் இப்படித் தான் நடக்கும்...’ என, சாபம் விடாத குறையாக திட்டி தீர்க்கின்றனர்.

அகிலேஷ் யாதவோ, ‘அரசியல் நாகரிகம் கருதி, வாழ்த்து தெரிவிப்பதை சர்ச்சையாக்குவது சரியல்ல...’ என, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us