sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

 பதவி தேவையா?

/

 பதவி தேவையா?

 பதவி தேவையா?

 பதவி தேவையா?


PUBLISHED ON : டிச 22, 2025 03:03 AM

Google News

PUBLISHED ON : டிச 22, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'விளையாட்டாக செய்கிறாரா அல்லது தெரியாமல் செய்கிறாரா என தெரியவில்லை...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பற்றி, கவலையுடன் பேசுகின்றனர், அந்த மாநில கட்சியினர்.

'நிதிஷ்குமாருக்கு, 74 வயதாகி விட்டது. ஞாபக மறதியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சில நேரங்களில் அவரது நடவடிக்கைகள் கிண்டலடிக்கும் விதமாகவும் உள்ளன...' என, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அரசு நிகழ்ச்சியில் பங் கேற்றபோது, அதிகாரி ஒருவரது காலை தொட்டு, முதல்வர் நிதிஷ்குமார் வணங்கியது; மற்றொரு நிகழ்ச்சியில், அதிகாரி ஒருவரது தலையில் பூ ஜாடியை துாக்கி வைத்தது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதையெல்லாம் சுட்டிக்காட்டி, 'நிதிஷ்குமார், முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர்...' என, எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆனாலும், கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அவரது தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தன. நிதிஷ் குமாரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சமீபத்தில், பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முஸ்லிம் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய கையோடு, அந்த பெண் முகத்தில் அணிந்திருந்த மூடும் துணியான, 'புர்கா'வை திடீரென அகற்ற முயற்சித்தார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள், அவரை தடுத்து விட்டனர்.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், 'நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் நீடித்தால், இது போன்ற கோமாளித்தனம் தொடரும். இனியும், முதல்வர் பதவி அவருக்கு தேவையா...' என, கடுமையாக விமர்சிக்கி ன்றனர்.






      Dinamalar
      Follow us