தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'இந்த அவமதிப்பு தேவையா?'

 'இந்த அவமதிப்பு தேவையா?'

 'இந்த அவமதிப்பு தேவையா?'


PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சில நேரங்களில் இவர், தன்னை அனைத்து மாநிலங்களுக்கும் முதல்வர் என்று நினைத்து விடுகிறார்...' என கர்நாடக முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான சிவகுமாரை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள எதிர்க்கட்சியினர்.

ஆந்தி ராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலில், அதிகாலை நேரத்தில், 'நித்ய ஆரத்தி' என்ற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகாவின் மைசூரு மகாராஜா மற்றும் அவரது வாரிசுகள் உள்ளிட்ட மிக முக்கியமான வி.வி.ஐ.பி.,க்கள் மட்டுமே, இந்த தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் சிவகுமார், சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், 'நித்ய ஆரத்தி வழிபாட்டின் போது, கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வி.ஐ.பி.,க்களையும் தரிசனத் துக்கு அனுமதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.

தேவஸ்தான அதிகாரிகளோ, 'இந்த நடைமுறை, 500 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்படுகிறது. உங்களின் தனிப்பட்ட விருப்பத்துக்காக இந்த நடைமுறையை மாற்ற முடியாது...' என, சிவகுமாருக்கு பதில் கடிதம் அனுப்பினர்.

'மற்றொரு மாநிலத்தில் உள்ள கோவிலின் நடைமுறையை மாற்றும்படி உத்தரவிடுவதற்கு, சிவகுமாருக்கு அதிகாரம் உள்ளதா; இந்த அவமதிப்பு அவருக்கு தேவை தானா...?' என, கர்நாடகாவில் உள்ள பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us