உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கால்களில் 8 கிலோ சலங்கையை கட்டிக் கொண்டு நடனப் பயிற்சி செய்த ஸ்ரத்தா கபூர்

கால்களில் 8 கிலோ சலங்கையை கட்டிக் கொண்டு நடனப் பயிற்சி செய்த ஸ்ரத்தா கபூர்

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் தற்போது ஈத்தா என்கிற படத்தில் நடித்துள்ளார்.. வரும் டிசம்பர் நான்காம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.. மராத்தி கலை வடிவங்களான தமாஷா மற்றும் லாவணியில் சிறந்து விளங்கிய விதாபாய் நாராயண் காவ்கர் என்பவரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் லக்ஷ்மண் உடேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஜிஜி ரே ஜி என்கிற பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்தப் பாடலில் இடம்பெறும் நடனத்திற்காக ஸ்ரத்தா கபூர் சுமார் 25 நாட்கள் தினமும் 8 மணி நேரம் பயிற்சி செய்தாராம். அதிலும் நான்கு கிலோ எடையுள்ள இரண்டு சலங்கைகளை இரண்டு கால்களிலும் அணிந்து கொண்டு இந்த பயிற்சியை அவர் மேற்கொண்டு உள்ளார். அதே சமயம் படப்பிடிப்பின்போது முதல் நாளில் மிகச் சரியாக நடனமாடிய ஸ்ரத்தா கபூர் இரண்டாவது நாளில் தசை வலியால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் ஒரு மாதம் கழித்து இந்த நடன காட்சி திரும்பவும் எடுக்கப்பட்டதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !