'துரந்தர் 2' வசூலை முறியடிக்குமா 'ராமாயணா 1'?
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ராமாயாண' படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியா, வட அமெரிக்கா வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ள இந்தப் படம் தற்போது 1700 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருடத்தில் 1700 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு மார்ச் 2026ல் வெளியான ஹிந்திப் படமான 'துரந்தர் 2' படம் 1850 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது.
அந்த வசூலை முறியடிக்க இன்னும் 150 கோடி தான் தேவைப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்தும் பல புதிய படங்கள் வந்தாலும் 'ராமாயணா' படத்தின் வசூல் தொடர்ந்து நிறைவாகவே இருந்து வருகிறது. அது இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 'துரந்தர் 2' வசூலையும் முறிடியக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.