உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராமாயணா' வசூல் : இன்றைய சாதனை தெலுங்கில்….

'ராமாயணா' வசூல் : இன்றைய சாதனை தெலுங்கில்….

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ராமாயணா' படம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனையைப் படைத்து வருகிறது.

தற்போது தெலுங்கு வசூலில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் தயாரான ராமாயணா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தெலுங்கில் ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு இதற்கு முன்பு வெளியான படங்களில் 'வார் 2' படம் அதிகட்சமாக 67 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அதைத் தற்போது 'ராமாயணா' படம் முறியடித்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதன் வசூல் 70 கோடியை நெருங்கி வருகிறதாம்.

தென்னிந்திய ரசிகர்களையும் கவரும் விதத்தில் ஹிந்திப் படங்கள் இருந்தால் அவை நல்ல வசூலைப் பெறும் என்பதற்கு 'ராமாயாணா' படம் புதிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமாக 400 கோடி வசூலை நெருங்கி வருவதாகச் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !