உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளையுடன் நிறைவுக்கு வரும் 'ஜெயிலர் 2' தியேட்டர் திரையீடு?

நாளையுடன் நிறைவுக்கு வரும் 'ஜெயிலர் 2' தியேட்டர் திரையீடு?

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடித்து அக்டோபர் 15ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர் 2'. சுமார் 830 கோடி வசூலைக் கடந்து இப்படம் ஓடி வருகிறது.

ஓடிடி தளத்தில் நவம்பர் 12ம் தேதி வெளியானது. அதன்பின்பும் கடந்த இரண்டு வாரங்களாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்குப் புதிய படங்கள் வந்தாலும் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் குறிப்பிடும்படியாக இருந்தது.

படம் தியேட்டர்களில் வெளியாகி 45 நாட்கள் ஆகியுள்ள நிலையில் நாளையுடன் தியேட்டர் திரையீடு நிறைவடையும் எனத் தெரிகிறது. ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் நாளையுடன் முன்பதிவை நிறுத்துகிறார்கள். அதற்குப் பிறகான நாட்களில் முன்பதிவைக் காட்டவில்லை.

இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் நம்பர் 1 இடத்திலும், இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 3ம் இடத்திலும் தற்போது 'ஜெயிலர் 2' உள்ளது.

வட இந்தியாவில் இப்படம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் 1000 கோடி வசூலைப் பெற்று தமிழ் சினிமாவில் புதிய சாதனையைப் படைத்திருக்கும். அந்த ஒரு வருத்தம் ரஜினி ரசிகர்களுக்கும், தமிழ்த் திரையுலகத்தினருக்கும் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !