உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : குறுகிய காலத்தில் காணாமல் போன 'ஆவாரம்பூ'

பிளாஷ்பேக் : குறுகிய காலத்தில் காணாமல் போன 'ஆவாரம்பூ'

பாரதிராஜா இயக்கிய 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமானவர் அருணா. அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்தார். இவரது தங்கைதான் நந்தினி. மலையாள படங்கிளல் நடித்து வந்த நந்தினி, தமிழில் மன்சூரலிகான் நடித்த 'சின்னப்பூவை கிள்ளாதே' படத்தில் செண்பகம் என்ற பெயரில் நடித்தார். இந்த படம் நீண்ட நாள் கிடப்பில் கிடந்ததால் அடுத்த படத்தில் நடிக்க முடியாமல் இருந்தார். பின்னர் மலையாள இயக்குனர் பரதன் இயக்கிய 'ஆவாரம்பூ' படத்தின் மூலம் அறிமுகமானார்.

இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் ஆலோலம் பாடி, அடுக்கு மல்லி எடுத்து, மந்திரம் இது , “சாமிகிட்ட சொல்லி வச்சு” எல்லா பாட்டும் செம்ம ஹிட்டு. இந்த படத்துலதான் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் கவுண்டமணி காமெடி வரும். இந்த படத்தில் நந்தினி மேக்அப் போடாமல் இயல்பாக நடித்திருந்தார்.

அதன்பிறகு 'ஊரெல்லாம் உன் பாட்டு' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் படத்தின் பாடல்கள் மூலம் நந்தினி பிரபலமாக அறியப்பட்டார். அதன்பிறகு படங்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்த நந்தினி 'பொன்னுமணி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மீண்டும் மன்சூரலிகான் இயக்கிய 'காத்தவராய கிருஷ்ண காமராஜ்' என்ற படத்தில் நடித்தார். இதுதான் அவரது கடைசி படம். அதன்பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாவிட்டார். என்றாலும் 'ஆவாரம்பூ' படமும் அதில் நந்தினி நடித்த 'தாமரை' கேரக்டரும் இப்போதும் நினைவு கூறப்படும். இந்த படத்தின் மூலம்தான் வினித்தும் தமிழில் அறிமுகமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !