உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டே மாதத்தில் பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு நிறைவு

இரண்டே மாதத்தில் பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு நிறைவு


மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் ஒன்று 'ஒடியன்'. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, 'பிரம்மயுகம்' மூலம் புகழ்பெற்ற இயக்குநர் ராகுல் சதாசிவன் இப்படத்தை இயக்குகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் இந்தப் படத்தைப் பிரித்விராஜூடன் இணைந்து தயாரிக்கிறார். கடந்த செப்டம்பர் 14ம் தேதி பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு மாதத்திலேயே நிறைவடைந்துள்ளது.

இதில் பிரித்விராஜிற்கு பத்து நாட்களும், நடிகை மஞ்சு வாரியருக்கு 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் இதே 'ஒடியன்' என்கிற பெயரில் ஒரு படம் வெளியானதும், அதிலும் மஞ்சு வாரியர் தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அந்தக் கதையிலிருந்து மாறுபட்டு ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக இந்த 'ஒடியன்' உருவாகி வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !