உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 957 மில்லியன் பார்வைகள் : புட்ட பொம்மா சாதனையை முறியடித்த சுயாதீன தெலுங்குப் பாடல்

957 மில்லியன் பார்வைகள் : புட்ட பொம்மா சாதனையை முறியடித்த சுயாதீன தெலுங்குப் பாடல்

அலா வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டேவின் புட்ட பொம்மா பாடல், சுமார் ஏழு ஆண்டுகளாக யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தெலுங்குப் பாடல் என்ற சாதனையைத் பெற்றிருந்தது. 955 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்த அந்தப் பாடல் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதாவது, ராமு ரத்தோட், லிகிதா ஆகியோர் பாடி நடித்துள்ள, ரானு பம்பாய்கி ரானு என்ற நாட்டுப்புறப் பாடல் கடந்த ஜனவரி 23, 2025 அன்று வெளியானது. இப்பாடலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது 957 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அல்லு அர்ஜுன் போன்ற ஒரு முன்னணி நட்சத்திரம் நடித்த பிரபலமான திரைப்படப் பாடலை, ஒரு சுயாதீனப் பாடல் முறியடித்திருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது.

தற்போது தென்னிந்திய அளவில் இப்பாடலுக்கு முன்னால் இருப்பது மாரி 2 படத்தில் இடம்பெற்ற தனுஷின் ரவுடி பேபி பாடல் மட்டுமே. அது 1.77 பில்லியன் பார்வைகளைக் கொண்டுள்ளது. ரானு பம்பாய்கி ரானு பாடல் அந்த இடத்தைப் பிடிக்க இன்னும் மிகப்பெரிய எண்ணிக்கையைக் கடக்க வேண்டியுள்ளதால், அது இப்போதைக்குச் சாத்தியமில்லாத கடினமான இலக்காகவே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !