உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவிடமிருந்து 'வாட்ச்' பரிசு பெற்ற 'சீன்' பட வில்லன் நஸ்லென்

சூர்யாவிடமிருந்து 'வாட்ச்' பரிசு பெற்ற 'சீன்' பட வில்லன் நஸ்லென்


மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென் மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியான படம் 'சீன்'.

இப்படம் 10 நாட்களில் 260 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருவதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஆண்டில் இந்தப் படத்தையும் சேர்த்து மூன்று 250 கோடி படங்களைக் கொடுத்துள்ளார் சூர்யா.

இப்படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் நஸ்லெனுக்கு சூர்யா விலையுயர்ந்த வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இத்தகவலைக் கொடுத்துள்ளார்.

அந்த வாட்ச் 'கார்ட்டியர்' கிளாசிக் வாட்ச், அதன் விலை சுமார் 4 லட்சத்திற்கும் மேல் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

2024ல் வெளிவந்த 'பிரேமலு', 2025ல் வெளிவந்த 'லோகா சாப்டர் 1' படங்கள் மூலம் தமிழிலும் அறியப்பட்ட நடிகர் நஸ்லென், 'சீன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அவரது முதல் தமிழ்ப் படமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !