ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க பரிசீலனையில் 3 நடிகைகள்!
ராம் சரண் மற்றும் இயக்குனர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமான ஆர்.சி-17 இரண்டு நாட்களுக்கு முன்பு முறைப்படி தொடங்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் ஒரு போஸ்டரையும் வெளியிட்டனர். ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
எங்களது தகவல்களின்படி, ஆர்.சி-17 படத்திற்காக ராம் சரண், குடுமி மற்றும் ஒல்லியான உடலமைப்புடன் காட்சி தருவார். முனிவர் போன்ற தாடி மற்றும் நீண்ட முடியுடன் அவரது உருவ மாற்றம் மிகவும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் ஒரு பிரமாண்டமான படப்பிடிப்பு அட்டவணையுடன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் சுகுமார்.
இதற்கிடையில், கதாநாயகியின் தேர்வு இன்னும் நிலுவையில் உள்ளது. சாரா அர்ஜ'ன் மற்றும் அனீத் பட்டா உட்பட பல நடிகைகளை பரிசீலித்து பட்டியலிட்டு இருந்தாலும், சமீபத்தில் ஒரு மெகா ஹிட் படத்தை அளித்த மற்றொரு நடிகையையும் அவர் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ராம் சரணுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற இறுதி முடிவை எடுப்பதற்கு முன் அவருக்குத் மேக்கப் டெஸ்ட் எடுக்க இயக்குனர் விரும்புவதாகத் தெரிகிறது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ராம் சரண் இந்தப் படத்திற்காக மிகவும் ஆர்வமாக உள்ளார். மேலும் தனது பிற திட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.