உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீலீலா-க்கு கை கொடுக்கும் தமிழ் சினிமா

ஸ்ரீலீலா-க்கு கை கொடுக்கும் தமிழ் சினிமா

தெலுங்குத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து கதாநாயகியாக உயர்ந்தவர் ஸ்ரீலீலா. 'பகவந்த் கேசரி, குண்டூர் காரம்' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். குறிப்பாக அவரது நடனத் திறமை மற்ற திரையுலக ரசிகர்களையும் ஈர்த்தது.

இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பும் பேசப்பட்டது.

தெலுங்கில் குறுகிய காலத்தில் பிரபலமானவருக்கு தற்போது தெலுங்கில் எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. ஆனால், தமிழ் சினிமா அவருக்குத் தற்போது கை கொடுத்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு அஜித் ஜோடியாக அவர் நடிக்க உள்ள 'டேர் டெவில்' படத்தின் பூஜை நடைபெற்றது. தனுஷுடன் நடிக்கும் 'ஓம்' படத்தில் அவரது கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தில் அவர் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் அவரது மூன்று தமிழ்ப் படங்கள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இவை தவிர ஹிந்தியில் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !