ஷேன் நிகாமின் புதிய தமிழ் படம் தொடக்கம்
ADDED : 4 hours ago
'மெட்ராஸ்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார், மலையாள நடிகர் ஷேன் நிகாம். மலையாளத்தில் 'ரைபிள் கிளப்' படத்தை தயாரித்த ட்ரூ ஸ்டோரி நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படத்தின் பணிகள் ஏற்காட்டில் பூஜையுடன் தொடங்கியது.
ஷாம் சூர்யா இயக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜான் கொக்கன் மற்றும் பர்ஹான் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகி தேர்வு நடந்து வருகிறது. ஆஷிக் அபு ஒளிப்பதிவு செய்ய, அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார், ஏற்காட்டின் மலைப் பகுதியில், படப்பிடிப்பு தொடங்கியது.