உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வெள்ளி விழா தீபாவளி படம் 'நந்தா'

பிளாஷ்பேக்: வெள்ளி விழா தீபாவளி படம் 'நந்தா'

2001ம் ஆண்டு வெளியாகி இந்த தீபாவளிக்கு வெள்ளி விழா கொண்டாடும் பட வரிசையில் 'நந்தா' படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்.

'சேது' படத்தின் வெற்றிக்கு பிறகு நாடறிந்த இயக்குனரான பாலா அடுத்து இயக்கிய படம்தான் 'நந்தா'. இந்த படத்தில் அப்போது பெரிய ஹீரோவாக வளர்ந்து வந்த அஜித்தான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் விவகாரம், அதிக நாள் படப்பிடிப்பு இவற்றின் காரணமாக அஜித் நடிக்க மறுத்ததை தொடர்ந்து சூர்யாவை தேர்வு செய்தார் பாலா. இந்த படம் சூர்யாவின் கேரியரில் திருப்புமுனை தந்தது.

படத்தின் நாயகியாக லைலாவை ஏற்கெனவே பாலா தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் சூர்யாவோ ஜோதிகா ஹீரோயின் என்றால்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தார். அப்போது சூர்யா ஜோதிகாவை ரகசியமாக காதலித்து வந்தார். இறுதியில் பாலா சொல்லுக்கு சம்மதம் சொல்லி லைலா உடன் நடித்தார்.

ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண், சினிமாவிற்கு சிறிது இடைவெளி விட்டிருந்தார். அப்போது பாலா அவரை அணுகி படத்தின் கேரக்டரை சொல்லி நடிக்க கேட்டார். அதற்கு பாலா 'இந்த கேரக்டரில் நான் நடிப்பதை விட சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும்' என்றார். 'அவரிடம்தான் முதலில் கேட்டோம் அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் அவரது உடல்நலம் ராமேஸ்வரம் வெயிலையும், சுடுமணலையும் தாங்காது ராஜ்கிரணை நடிக்க வையுங்கள் என்று பிரபு சொன்னதால்தான் வந்தோம்' என்றார் பாலா. 'சிவாஜி நடிக்க இருந்த கேரக்டரில் நான் நடிப்பது பெரிய கொடுப்பினை நான் நடிக்கிறேன்' என்று ஒத்துக் கொண்டார் பாலா. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை ராஜ்கிரண் பெற்றிருந்தார்.

இலங்கை தமிழர்களுக்கு உதவும் ராமேஸ்வரம் தாதாவின் கதைதான் நந்தா. இப்போது பார்த்தாலும் அப்படியொரு விறுவிறுப்பு படத்தில் இருக்கும். சூர்யாவுக்கு அவரது தாய் விஷம் கொடுக்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் கதறி அழ வைக்கும். தீபாவளி பட சாய்சில் 'நந்தா'வையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சசிக்குமார் திருப்பூர்
2026-11-03 20:40:41

பாலாவின் சீரியஸான படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டர் மறக்க முடியாது