உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை மூன்று முறை நிராகரித்த நஸ்ரியா

சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை மூன்று முறை நிராகரித்த நஸ்ரியா

வரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டமாக சூர்யா, நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'ஆவேசம்' படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகை நஸ்ரியாவும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

இதன் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வருகை தருவதில் மகிழ்ச்சி என்று கூறியவர், தன்னுடன் மூன்று படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்த போதும் அதை நஸ்ரியா நிராகரித்ததாக ஒரு புதிய தகவலை சூர்யா வெளிப்படையாகவே கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.. தனது படங்களை மட்டுமல்ல, கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் வாய்ப்புகளை நஸ்ரியா மறுத்துள்ளார் என்றும், ஆனால் நான்காவது முயற்சியாக தற்போது தங்கள் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறிய சூர்யா, அவருக்கு 'நேச்சுரல் ஸ்டார்' என்ற பட்டத்தையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !