உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் டேர் டெவில் படத்தில் ஸ்ரீலீலா உறுதி : சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

அஜித்தின் டேர் டெவில் படத்தில் ஸ்ரீலீலா உறுதி : சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

கடந்த சில நாட்களாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் டேர் டெவில் படத்தில் ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது. இதுவரை அதிகாரப்பூர்வ நடிகர்கள் விவரம் எதுவும் வெளியிடப்படாத நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த ஊகங்கள் உலா வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், இப்படத்தில் ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன் மற்றும் சுனில் ஆகியோர் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். படப்பிடிப்பு ஹைதராபாத், மலேசியா மற்றும் பாங்காக்கில் நடைபெறவுள்ளது. குட் பேட் அக்லி படத்திலிருந்து மாறுபட்டு, டேர் டெவில் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையிலான ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய ஆதிக், அஜித்தே டேர் டெவில் என்ற தலைப்பைப் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தார். சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக, இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளன. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு, நவம்பர் 12 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. ஷாலினி அஜித்குமார் பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன் பேனரின் கீழ் தயாரிப்பாளராக அறிமுகமாகி இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !