உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜீவாவின் 49வது படம் தொடங்கியது

ஜீவாவின் 49வது படம் தொடங்கியது

'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றிக்கு பிறகு பிசியாகி விட்டார் ஜீவா. தற்போது அவர் 'சரஸ்வதி' என்ற தெலுங்கு படத்திலும், 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீவாவிற்கு திருப்பம் கொடுத்த சிவா மனசுல சக்தி, படத்தை இயக்கிய ராஜேஷ் எம் இயக்குகிறார். யுவன் இசை அமைக்கிறார். சுதாகர், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், துளசி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். இது தவிர 'கிடா' படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் 'தகப்பன்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு 49வது படம். நாயகியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். முகமது முஸ்தபா இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !