ஷாரூக்கானின் 'கிங்' பட அப்டேட் : 'கில்லர்' இல்லை 'லவ்வர்'
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ஹிந்திப் படம் 'கிங்'. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் பின்னணி இசையும், சச்சின் ஜிகார் ஆகியோருடன் இணைந்து பாடல்களுக்கும் இசையமைக்கிறார்.
இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கான பதிவில், 'கில்லர் இல்லை, லவ்வர்,' என்ற வாசகத்தை இணைத்துள்ளார்கள். இந்த வருடம் டிசம்பர் 24ம் தேதி இப்படம் வெளியாகிறது.
ஷாரூக்கான் நடித்து கடைசியாக 2023 டிசம்பர் மாதத்தில் 'டங்கி' படம் வெளிவந்தது. அப்படம் அதற்கு முன் வெளியான 'ஜவான்' படத்தின் வசூலுடன் ஒப்பிடும் போது பாதியைத்தான் பெற்றது. 'டங்கி' வசூல் சுமார் 450 கோடி, 'ஜவான்' வசூல் 1150 கோடி.
சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஷாரூக்கானின் படம் வெளிவருகிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.