உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைபர் கிரைம் போலீசில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா புகார்

சைபர் கிரைம் போலீசில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா புகார்

நட்சத்திரத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சமீபத்தில் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன் தொகுப்பாளர் இயக்குனர் கரண் ஜோஹர் கேட்ட சில கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான பதிலளித்தனர்.

அவர்களது காதல், திருமணம் என இருவரும் சுவாரசியமான பதில்களையும் கொடுத்தனர். ஒரு வருடமாக விஜய் தேவரகொண்டாவிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு 100 முறை கேட்டிருப்பேன் என்றும் ராஷ்மிகா பேசியிருந்தார். இவையெல்லாம் வைத்து சமூக வலைத்தளங்களில் டிரோல்கள், கமெண்ட்கள், ரீல்ஸ்கள் என நிறைய வர ஆரம்பித்தது. இருவரும் பிரிய உள்ளனர் என்றெல்லாம் கூட பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ராஷ்மிகா ஒரு அறிக்கையையும், விஜய் தேவரகொண்டா ஒரு வீடியோவையும் வெளியிட்டனர். இந்நிலையில் அவர்களின் மேனேஜர் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

“போலியான பொய்யான கதைகள், மாற்றியமைக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்கள், ஆன்லைன் தொல்லை மற்றும் காரணமற்ற விவாகரத்து வதந்தி பதிவுகள் என பரவி உள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்குரிய ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்களாம்.

காவல்துறையினர் அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !