உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி பாரடைஸ்' : மகேஷ் பாபு மகன் அளித்த ரேட்டிங்கால் சர்ச்சை

'தி பாரடைஸ்' : மகேஷ் பாபு மகன் அளித்த ரேட்டிங்கால் சர்ச்சை


ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில், நானி, கயாடு லோகர், மோகன்பாபு மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 24ல் வெளிவந்த தெலுங்குப் படம் 'தி பாரடைஸ்'. இப்படம் 155 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் படம் வெளியான நான்கு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்திற்கு பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மகன் கவுதம் அளித்துள்ள ஒரு ஸ்டார் ரேட்டிங் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்கள் குறித்த விமர்சனம், ரேட்டிங் ஆகியவற்றைத் தரும் லெட்டர்பாக்ஸ்டி என்ற இணையதளத்தில் அவர் இதைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்பு யஷ் நடித்த 'டாக்சிக்' படத்திற்கு அரை ஸ்டார் ரேட்டிங்கை அவர் கொடுத்த போதும் சர்ச்சை எழுந்தது. அவரது அப்பா மகேஷ் பாபு நடித்த சில படங்களுக்கும் அவர் இரண்டு ஸ்டார்கள் மட்டுமே ரேட்டிங் கொடுத்திருந்தார்.

தி பாரடைஸ் படம் ஓடிடியில் வெளியான பிறகு மீண்டும் எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. குறிப்பாக கதாநாயகி கயாடு லோகர் கதாபாத்திரம் குறித்துத்தான் ரசிகர்கள் அதிக விமர்சனங்களைப் பதிவு செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !