உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சத்துல பதுக்கம்மா' திருவிழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

'சத்துல பதுக்கம்மா' திருவிழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

தெலுங்குத் திரையுலகத்தின் இளம் ஜோடியான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 'சத்துல பதுக்கம்மா' கலாச்சாரத் திருவிழாவில் கலந்து கொண்டு நடனமாடினர்.

தெலங்கானா மாநிலத்தில் நவராத்திரித் திருவிழாவின் கடைசி நாளில் நடைபெறும் மலர் திருவிழா தான் 'சத்துல பதுக்கம்மா'. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரகம் போன்ற ஒன்றை தலையில் வைத்து கவுரி தேவியை வழிபடுவர். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஒன்றாக நடனமும் ஆடுவர்.

நேற்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு ராஷ்மிகா பேசுகையில், “நான் உங்கள் அனைவருடனும் நடனமாடுவதற்காகவே இங்கு வந்தேன். இப்போது, என்னை மேடைக்கு அழைத்து பேசச் சொல்கிறார்கள். பொதுவாகவே, மேடையில் இருக்கும்போது என்ன பேசுவது என்று எனக்குத் தெரியாது. இன்று நிலைமை இன்னும் புரியவில்லை.

எங்கள் திருமணம் முடிந்தபோது, 'பதுக்கம்மா' பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்வதாகவும், அங்கு நான் நடனமாடலாம் என்றும் விஜய் என்னிடம் கூறினார். திருமணத்திற்குப் பிறகு நாங்கள் கொண்டாடும் முதல் பதுக்கம்மா பண்டிகை இது. உங்கள் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்.

எங்கள் வீட்டில் என் அத்தை மற்றும் குடும்பத்தினர் பதுக்கம்மா நடனம் ஆடுவார்கள்,எனக்கு ஓரளவுதான் தெரியும். ஆனால் இன்று, தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ மருமகளாக நான் இந்த பதுக்கம்மா கொண்டாட்டத்திற்கு வந்துள்ளேன்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !