‛ரவுடி ஜனார்த்தனா' - கீர்த்தி சுரேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 16ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் ‛ரணபாலி'. ராகுல் சங்கிருத்தியன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இதை அடுத்து, ரவிகிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் கிராமப்புற மாஸ் ஆக்ஷன் கதையில் உருவாகும் ‛ரவுடி ஜனார்த்தனா' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பாரம்பரிய உடையில், கதாநாயகனுடன் படகில் அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் வசீகரமாகக் காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர் விஜய் தேவரகொண்டாவின் தோற்றத்தை வேண்டுமென்றே மறைத்துள்ளது.
கதாநாயகி ரவுடி ஜனார்த்தனா படத்தின் அழகான பக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், இப்படம் ஒரு அழகான அனுபவத்தை வழங்கும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார். கிறுத்தோ சேவியர் இசையமைக்கிறார்.