உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒன்பது மாதங்களாக புதிய படம் எதிலும் ஒப்புக் கொள்ளாத மிருணாள் தாக்கூர்

ஒன்பது மாதங்களாக புதிய படம் எதிலும் ஒப்புக் கொள்ளாத மிருணாள் தாக்கூர்

சீதா ராமம் படத்தில் நடித்தது மூலம் தெலுங்கில் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றவர் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். அதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மாறி மாறி நடித்து வந்தார். தமிழுக்கும் வருவார் என எதிர்பார்த்த நிலையில் இப்போது வரை நேரடி தமிழ் படத்தில் அவர் ஒப்பந்தமாகவில்லை. இன்னொரு பக்கம் நடிகர் தனுஷ் உடன் நட்பு வளையத்தில் இருக்கும் அவர், அவருடன் பல நிகழ்ச்சிகளுக்கு வெளிப்படையாகவே சென்று வந்த நிகழ்வுகள் இவர்கள் இருவருக்கும் இடையே நட்பை தாண்டி ஏதோ இருக்கிறது என்கிற யூகத்தை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது.

ஆனால் அவற்றை மிருணாள் தாக்கூர் மறுத்தாலும் ஏதோ சில காரணத்திற்காக கடந்த 9 மாதங்களாக படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார். அனர் கூறுகையில், ‛‛கடந்த ஒன்பது மாதங்களாக நான் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. அர்த்தமுள்ள ஒரு கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். இனி எந்தவொரு அறிவிப்பும் எனது சமூக ஊடகப் பக்கத்தில்தான் வெளியாகும்'' என்றார்.

அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் ராக்கா படத்தில் கூட இவர் இணைந்து நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது அதிகாரப்பூர்வமான தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !