400 கோடி வசூலைக் கடந்த 'திரிஷ்யம் 3'
ADDED : 6 hours ago
அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் அபிஷேப் பதக் இயக்கத்தில் ஒரு வாரம் முன்பு அக்டோபர் 2ம் தேதி வெளியான ஹிந்தித் திரைப்படம் 'திரிஷ்யம் 3'. இப்படத்திற்க ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வசூலைக் குவித்து வருகிறது.
ஒரு வார முடிவில் இப்படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 300 கோடிக்கு அதிகமாகவும், வெளிநாடுகளிலும் 100 கோடியை நெருங்கியும் இந்தப் படம் வசூலித்துள்ளதாம்.
அஜய் தேவ்கன் நடித்து இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக 370 கோடி வசூலித்து 'சிங்கம் அகய்ன்' படம் இருந்தது. அந்த சாதனையை தற்போது 'திரிஷ்யம் 3' முறியடித்துள்ளது.
அஜய் தேவ்கனின் முதல் 400 கோடி படமாக அமைந்துள்ள இப்படம் 500 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.