திலீப் நடிக்கும் புதிய படம் 'நீக்கம்' ; ஷாஜி கைலாஷ் மகன் இயக்குகிறார்
ADDED : 14 hours ago
நடிகர் திலீப் நடிப்பில் கடந்த வருடம் 'ப ப ப' என்கிற படம் வெளியானது. மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியது. இந்த நிலையில், தற்போது 'நீக்கம்' என்கிற புதிய படத்தில் திலீப் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பைச் சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது நடிகர் திலீப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் ஜெகன் ஷாஜி கைலாஷ் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இதுவரை தான் நடித்துள்ள படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய தோற்றத்தில் திலீப் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.